பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

தமிழர் வரலாறு

யில் உண்டாகியிருக்கும் சிறுசிறு துளிகளான வியர்வையைத் தன்னுடைய அழகிய சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு, சமையல் முடிந்தும், கணவன் வந்திலனே என்ற நினைப்பால் தம் மீது கொண்ட சினத்துடன் அட்டிற் சாலையில் இருக்கிறாள். விருந்தினராய் வர விரும்புவார் என்னோடு வருவார்களாக விருந்தினர் முன்னே, அழகிய மாமை நிறம் வாய்ந்த என் காதலி, என்னைச் சினந்து கண் சிவந்து காட்சி தரமாட்டாள்; முள்போலும் சிறிய பற்கள் சிறிதே தோன்றப் புன்னகையே காட்டுவள்; அவளின் சிரிதே முகத்தை நானும் கண்டு மகிழ்வேன்,


"தடமருப்பு எருமை மடநடைக் குழவி
துண்தொறும் யாத்த காண்தகு நல்இல்,
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேழை,
சிறு தாழ் செறித்த மெல்விரல் சேப்ப,
வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகை இப்
புகை உண்டு அமர்ந்த கண்ணன், தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறு நுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள், நப்புலந்து
அட்டி லோளே, அம்மா அரிவை !
எமக்கே, வருகதில் விருந்தே சிவப்பாளன்று ;
சிறிய முள் எயிறு தோன்ற

முறுவல் கொண்ட முகம் காண் கம்மே'.
-நற்றிணை : 120

சிற்றூர் ஆட்சிமுறை : .

பண்டைய நாட்களில், தமிழ்நாட்டின் வாழ்க்கை முறை, முழுக்க முழுக்க சிற்றூர்களைச் சார்ந்தே இருந்தது. சிற்றூர்கள், இப்பொழுதைக் காட்டிலும், அன்று, தன்னிறவுை பெற்று விளங்கின. சிற்றூர் ஆட்சிமுறை, எளிதில் விளங்கிக் கொள்ளலாகாச் சட்டங்களை எதிர்நோக்கியிருக்கவில்லை. சட்டங்கள் மூலம், மக்கள் எதை எதிர்பார்த்தனரோ,