பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

285

 ராலும், தாலமியாலும் விரிவாக எடுத்துக் கூறப்பட்ட எண்ணற்ற துறைமுகங்கள் இடம் பெறத் துணைபுரிந்தது: முந்திய அதிகாரத்தில் எடுத்துக் காட்டிய பெளத்த ஜாதகா கதையிலிருந்து, கி. மு. முதல் ஆயிரத்தாண்டில், காவிரிப்பூம்பட்டினம், சோழ அரசர்களின் மிகப் பெரிய துறைமுகமாகவும், அவர்களின் இரண்டாவது தலைநகராகவும் திகழ்ந்தது என்பதை அறிந்துகொண்டோம். சமஸ்கிருத எழுத்தாளர்களால் பாண்டியரின் நுழைவாயில் எனும் பொருளில், பாண்டிய கவாடம் என அழைக்கப்பட்ட கொற்கை, பாண்டியர் தலைநகராம் பெருமையை மதுரையிலிருந்து பறித்துக்கொண்டு, பாண்டியர் தலைநகர், அண்மையில், மதுரைக்கு மாற்றப்பட்டது எனத் தாலமி கூறும் காலம் வரை, தக்கவைத்துக் கொண்டிருந்தது. கொற்கையின் முக்கியத்துவம், பண்டையோரால் பெரிதும் புகழப்பட்ட முத்து வாணிகத்தின் நிலைக்களமாய் உண்மையிலேயே இடம் பெற்றது. சேரர்களின் முக்கியத்துறைமுகங்கள். மேற்கு, ஆசியாவுக்கும் , எகிப்துக்கும், அவற்றிற்கு அப்பாலும், மிளகையும், மற்றும் மணம்தரு உணவுப் பண்டங்களையும் ஏற்றுமதி செய்த முசிறியும், தொண்டியுமாம்.

அரசர்கள் :

நாகரீக வாழ்வு காணா அப்பழங்காலத்தில், அரசனுக்கான நிர்வாகப் பணிகள் மிகச்சிலவே; ஆட்சி முறையில் தேவைப்படும் ஒரு சிலவும், ஊர்அறங்கூர் அவைகளால், நனி மிகப் பழைய முறைக்கேற்ப நிறைவேற்றப்பட்டன. சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தர்கள், ஒருவரோடொருவர் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் நாடு பிடிப்பதற்காக என்று இல்லாமல் தங்கள் வீரத்தைப் பறைசாற்றவும், பிற அரசர்களைக் காட்டிலும், தானே பெரியவன், பேரரசன் என்ற நிலையை நாட்டவுமே நடை பெற்றன. அம்மூன்று நாடுகளின் எல்லைகள் ஒரு நிலையிலேயே இருந்தன. களத்தில் வெற்றிகண்டிருந்தாலும், எல்லைகள் மாற்றம் பெறவில்லை. மூன்று அரசுகளும்,