பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அதிகாரம் : XIV
வெளி நாட்டு வாணிகம்
கி. மு. 600 முதல் கி. பி. 14 வரை

தாரியஸ் ஆட்சியில்:

கி. மு. 606-ல் அஸ்ஸிரியப் பேரரசு கவிழ்க்கப்பட்டது. அது நிகழ்ந்ததும், பாபிலோன், ஆசிய வாணிகத் தலைமையிடமாக ஆகிவிட்டது. யவனர், யூதர் பொய்னிஷியர், இந்தியர். சீனர் என்ற உலக வணிக இனங்கள், தங்கள் வணிகப் பண்டங்களைப் பாபிலோனிய சந்தைகளுக்கு எடுத்துச் சென்றன. அயெஸ்செய்லஸ் (Aeschylus) என்பார் எல்லா வகை மக்களும் வேறறக் கலந்துவிட்ட ஒரு பெருங்கூட்டம்' (Painminikton hoclon)என அழைக்குமளவு, பாபிலோன் நகரத்து மக்கள் கலந்துவிட்டனர். கி. பி. ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வளம் பெற்றிருந்த தென்னிந்திய வணிகர்களின் குடியிருப்பு ஒன்று, அந்நகரில் இடம் பெற்றுவிட்டது. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில், நிப்பூரில் (Nippur) இருந்த, முராஷுவுக்கும், (Murashu), அவர் மகனுக்கும் உரிமைபுடையதான பெரிய வர்த்தக நிறுவனத்தின் வணிகத் தொடர்புடைய பட்டயங்களில், வணிகர் தொடர்பான குறிப்புகளைக் காண்கிறோம். (J. R. A. S. 1917, P. 237 Kennedy) கி. மு. 538-ல் ஸைரஸ் (Cyrus), பாபிலோனியப் பேரரசை அழித்துவிட்டான். அவன் வழிவந்த மதிப்பார்ந்த தாரியஸ் (Darius) கி. மு. 20-ஆம் நூற்றாண்டு போலும் காலத்தில், ஸெஸோஸ-டிரியெஸ் (Sesostriyes) என்ற ஒருவனால் முதன் முதலாக வெட்டப்பட்டு, கி. மு. 15-ஆம் நூற்றாண்டில் 18வது அரச மரபினர் ஆட்சியின் கீழ், மீண்டும். திறக்கப்பட்ட சூயஸ் கால்வாயைக், கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில், ஒரு பகுதியைத் திறப்பதன் மூலம், கடல்

த. வ.-19

.