பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் ... முதல் நுழைவு.

311

சொற்றொடர்களை, எழுவாய்ப் பொருளில் வரும் பெயர்ச் சொற்கள், அவற்றைத் தொடர்ந்து வருவன என இரண்டாகப் பிரித்து, அவ்விரண்டாம் பிரிவுகளைத் தமிழ் வேற்றுமை உருபுகளாகக் கொள்கிறார். பாணினியைப் பின்பற்றித் தமிழில், அவர், ஏழு வேற்றுமைகளைக் காண்கிறார் : சரியாகச் சொல்வதானால், உருவாக்குகிறார். அவர் மாணவர் தொல்காப்பியனார், ஐந்திரம் வழிச் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்களைப் பின்பற்றி, அவற்றை எட்டு ஆக்குகிறார். "காதலிபின்" என்பது "காதலி" என்பதன் வேற்றுமை உருபேற்ற பெயராயின், "காதலி எதிர்" என்பதும் வேற்றுமை உருபேற்ற பெயராகாதோ? இம்முறையில் கணக்கிட்டால், தமிழ் மொழியில் உள்ள பெயர்ச் சொற்களிலிருந்து, பெறலாகும் வினையெச்சப் பெயரெச்சத் தொடர்கள் எத்தனை உளவோ, அத்தனை வேற்றுமைகளைத் தமிழ்ப் பெயர்கள் கொண்டிருக்க வேண்டும்:


தமிழில், சமஸ்கிருத ஏழு வேற்றுமைகளை இறக்குமதி செய்தது போலவே, சமஸ்கிருத செயப்பாட்டு வினையையும் அவர், இறக்குமதி செய்துள்ளார். செயப்படுபொருள் குன்றாவினை செயப்படுபொருள் குன்றியவினை ஆகிய எல்லா வினைச் சொற்களும், சமஸ்கிருதத்தில் அடையும், உறுதியான சொல் திரிபே. அம்மொழி, செயப்பாட்டு நிலை, செயப்படு பொருள் குன்றாவினைகள், செயப்பாட்டு வினையாக மாறும்பொழுது, அவ்வினைகள், "சிங்கம் கொல்லப்பட்டது", என்பதில் உள்ளதுபோல், செயப்படுபொருனைச், செய்வினை முதலாம் எழுவாயாக மாற்றும், அப்பணியினைச் செய்கிறது, வினை முதலாம் எழுவாய் தெரியாதபோது, அல்லது, அவ்வினை முதல் குறிப்பிடத் தேவையில்லாதபோது, அல்லது. செயப்படுபொருள் வற்புறுத்தி உணர்த்தத் தேவைப்படும் போது இவ்வாறு வழங்குவது, பயனுடையதாகிறது. செயப்படுபொருள் குன்றிய வினைகளுக்குச் செயப்பாட்டுத்திரிந்த வடிவங்கள் தரப்படும் போது, இதுபோலும் அடிப்படைப் பயன் எதுவும் காணப்படுவதில்லை; என்றாலும், செயப்பாட்டுவினை ஆட்சியால், எவ்விதச் சிறப்புப்பொருளும்