பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. முதல் ஐந்நூறு ... வாணிகம்

469

அல்லது தூரக்கிழக்கு நாட்டவரால் அளிக்கப்பட்ட உரோமானிய நாகரீகத்தின் உண்மையான படப்பிடிப்பை உணர்த்தவல்லதான, தந்தத்தால் அணி செய்யப்பட்ட, வெள்ளிக் கம்பிகள் துணை கொண்டு ஆமை ஒட்டினாலான கூண்டுகளில் வைக்கப்பட்டன. இரண்டாம் நூற்றாண்டில் இவற்றின் வருகை பெருகி விட்டது. பெளவனியாஸ் (Pawsanias) என்பவர், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கிளிகள் பற்றியும் , இயல்பில் திரிந்த வியத்தகு விந்தை உயிரினங்கள் பற்றியும் கூறியுள்ளார். எல் கபாலுஸ் (Elgabalws) என்பார், கிளிகளின் தலைகளைக் கொண்டே, ஆடம்பர விருந்து மேசையை உருவாக்கக் கூடுமளவும், தம்முடைய சிங்கம் மற்றும் பிற விலங்குகளுக்கு உணவு அளிக்கக் கூடுமளவும், கிளிகளைப் .பெரும் எண்ணிக்கையில், பெற்றிருக்கும்போது, அரையன் (Arriyan) என்பார் அப்பறவைகள் பற்றி விவரித்துக் கூற மறுத்துள்ளார்”; (Warmington, Page ; 154) இந்தியாவிலிருந்து சென்ற பிற பறவைகளாவன; கிரேக்க புராணத்தில் கூறப்படும், பல நூறாண்டுக் காலம் வாழ்ந்து, தன்னைத்தானே எரித்துக் கொண்ட சாம்பவிலிருந்து மீண்டும் புத்துயிர் பெற்று வாழும் பெறற்கரிய பறவை போன்றதாக கி. பி. 47 இல், கிலாடியஸ் என்பவரால் மதிக்கத்தக்க, பட்டு வண்ண நெடுவால் பறவையாம் மயிலும், குறுங்கோழியுமாம். ஹட்ரியன்களாலும் (Hadrian) மற்றவர்களாலும், இந்தியாவிலிருந்து பாம்பு பெறப்பட்டனெ.(Wärrnington Page : 155-157).

விலங்கு தரும் பொருள்களில் வாணிகம்

விலங்குதருபொருட்கள், கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட்டன. தோல்களும், மெல்லிய மயிர் அடர்ந்த தோலாடைகளும் அவற்றுள் தலையாயவை. “பிளைணி அவர்கள், சீனப் பொருட்களாகக் குறிப்பிடும் இரும்பு, நுண்ணிய மெல்லாடை, தோல்கள் ஆகியவை, சீனாவிலிருந்து பெறப்பட்ட பொருட்களாகக் கொள்ளப்படல் கூடாது; மாறாக, கிளாடியஸ் ஆட்சிக் காலத்திலிருந்து கிரேக்க