பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தமிழர் வரலாறு

மனிதராம் பொயினிஷீயப் பழங்குடியினர்தாம், அப்பொருள் களைக் கொண்டு சென்றவர்; அல்லது பண்டமாற்றுச் செய்த இடைத்தரகராவர். இந்தியாவில் நாகரீக வளர்ச்சி, யூப்ரடஸ், ஆப்பிரிக்கா, மற்றும் இடம் விளங்காக் கீழை நாடுகளுக்குச் சென்று வாணிகம் புரிய, விரைந்து சுரு சுருப் பாகச் செயல்படும் வாணிகக் கப்பற்படை ஒன்றை உருவாக்கி விட்டது. அராபிய வணிகர்கள், ஆப்பிரிக்காவில், இந்திய வணிகர்கள் இருப்பதை மேலெழுந்தவாரியாகப் பொறுத்துக் கொண்டனர். ஆனால், விலைமதிப்பற்ற நவமணிகள், இலவங்கம், மிளகு, சாதிக்காய் போலும் உணவுக்காம் மணப் பொருள்கள், மேலும் மேலும் பெருகிக்கொண்டேயிருக்கும் எகிப்தியக் கடவுள் வழிபாட்டிற்கான நறுமணப்புகைஎழுப்பும் சாம்பிராணி போலும் மெழுக்குகள் பற்றிய, மிகு வருவாய் தரும் வாணிகத்தைச், செங்கடற்பகுதிக்கண் தங்கள் கையி லேயே வைத்துக் கொண்டனர். எகிப்திய அரசர்களின் செல்வ வளத்திற்குக் கூறப்படும் காரணப்படி, இதுவே, அவர்களின் பெரிதும் விழிப்போடு காத்துவந்த தனிச்சிறப்புரிமை. இதன் அடிப்படை மீதுதான் அவர்கள் வாழ்ந்தார்கள்; வளம் பெற்றார்கள். ஏடன் வளைகுடாவின் இருபக்கங்களிலும் உள்ள துறைமுகங்களில், இந்திய வணிகர்களிடமிருந்து, மஸ்லின் மணப் பொருள்களாம் இந்தியப் பண்டங்களை அவர்கள் விலை கொடுத்து வாங்கிக் கொண்டனர்; அல்லது பெற்றுக் கொண்டனர். அடுத்து, அப்பொருள்களைச் சுமந்து கொண்டு மேட்டு நிலங்களைக் கடந்து நைல் நதியின் தலைப் பிற்குச் சென்றனர்: அல்லது செங்கடல் வழியாகவும், பாலை வனத்தைக் கடந்தும் "தேபெஸ்" (Thebes) அல்லது. "மெம்பிஸ்" (Memphis) பகுதிக்குச் சென்றனர் என்று கூறுகிறார்.2 அராபிய இடைத்தரகர்களால், எகிப்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருள்கள் தென்னிந்தியப் பொருள்களாம் என்பதையும், தென்னிந்தியப் பரத. வர்கள் அப்பண்டங்களைத் தம்முடைய படகுகளில் ஏடனுக் கும், கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைக்கும் கொண்டு சென்றனர் என்பதையும் இணைத்துக் கொள்ளலாம். .