பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

129


ஆகிவிட்டது. சோழர் அரியணையில், பெரும்பாலும், கரிகாலனை அடுத்து அமர்ந்தோனாகிய நலங்கிள்ளி (இதற்கான அகச்சான்று இல்லை ஆயினும்), சேர, பாண்டியர்களிலும், தான் உயர்ந்தவனாம் என்ற நிலையினை நிலைநாட்டுவதற்காக, அவர்களோடு அடிக்கடிப் போர் மேற்கொள்ள வேண்டி நேர்ந்ததற்கேற்ப, அவ்விரு அரசுகளும், தங்கள் ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுவிட்டன. புலவர் கோவூர் கிழார் இவ்வாறு கூறுகிறார் :- "மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவற்றுள், பொருளும், இன்பமும், அறத்தைப் பின் தொடர்ந்து வருவதுபோல,

அடிக்குறிப்பு :

[இத்தொடர், ஆரியக் கருத்துக்கள், தமிழ்நாட்டில், நன்கு இடம்பெறத் தொடங்கிவிட்டன என்பதை உணர்த்துகிறது. வாழ்க்கையின் குறிக்கோள் பற்றிய ஆரியக் கருத்துக்களை உள்ளடக்கிய, உருவப் பொருள்களை, அருவப் பொருட்களோடு ஒப்பு காட்டும், இவை போலும் உவமைகள், கரிகாலனுக்கு முற்பட்ட காலத்துத் தமிழ் இலக்கியங்களில் காண்பது இயலாது.]

சேர பாண்டியர்களுடைய இரு குடைகளும் பின்னாக, முன்னே உயர்த்திய உன் வெண்கொற்றக்குடை, கலைகளால் நிறைந்த வெண்திங்கள் போலச் சிறந்து, சேய் நாடுகளிலும் சென்று நிழல் செய்யவல்ல பெரும்புகழ்பால் வேட்கை கொண்டு, அதை முடித்துக் கொள்வான் வேண்டி, எப்போதும், வெல்லும் போர்க்கு வாய்ப்பாக, பாசறைக் கண்ணே இருப்பதல்லது, தலைநகரின் கண் இருத்தலை நீ விரும்பாய். காவல் மிக்க பகைவர் அரண்மதில்களை மோதி மோதி அழித்ததனால், முனை மழுங்கிய கொம்புகளை உடையவாகிவிட்ட உன் போர்க்களிறுகளும் ஓய்வு கொள்ளா. போர் என்ற சொல் கேட்டதுமே பூசிக்கும் உள்ளம் உடையவராகிய, வீரக்கழல் அணிந்த உன் வீரர்கள், வென்று கைப்பற்றக் கருதிய நாடு, காடுகள் இடைப்பட்டுக் கிடக்க, நெடுந்

த.வ.II-9