பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டிய அரசர்கள்

185


மேலே எடுத்துக் காட்டிய நான்கு பகுதிகளுக்கும் பொருள்விளக்கம் காண்பதில், உரையாசிரியர் பொருள் விளக்கத்திலிருந்து முழுதும் மாறுபட்டுள்ளேன்:

இவ்வடநாட்டு வழிபாட்டு நெறிகள், பழைய தமிழர் வழிபாட்டு நெறிகளை, இடங்கொண்டு விடுவதோ, அழிந்து விடுவதோ செய்யவில்லையாதலாலும், அரசர்களின் பேராதரவைப் பெறவில்லையாதலாலும், ஏழாவது முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையான காலத்தில், அவை நடந்து கொண்டதுபோல், தமக்குள்ளே கடுமையான போர் மேற்கொண்டு விடாமல் அடுத்தடுத்து இயங்கி வந்தன.

மதுரை மாநகர் : ஒரு விளக்கம் :

திருவாளர் சுந்தரம்பிள்ளை அவர்கள், மதுரைக் காஞ்சியின் பெரும் பகுதியை, மதுரை மாநகரின் விளக்க உரையாக வடித்துத் வந்துள்ளார். மிகத் தெளிவாக உளது என்றாலும், அஃது ஒரு கற்பனைக் காட்சி அன்று : மாறுக, இப்பாட்டில் இடம் பெற்றிருக்கும் செய்திகளையே அடிப்படையாகக் கொண்டது. அது, சென்னைக் கிறித்துவக் கல்லூரி 1911 ஆம் ஆண்டு மலரில் வெளியிடப்பட்டது. ஈண்டு, அது எடுத்தாளப்பட்டுளது ; "கதவில் பொறிக்கப்பட்டிருக்கும் காவல் தெய்வத்திற்கு, வழிபடு முறையாக, நாள்தோறும் எண்ணெய் வார்ப்பதால் கறுத்துக் காணப்படும் கதவுகள் பொறுத்தப்பட்ட, மழைமேகங்கள் தவழும், உயர்ந்த மலைபோலக் காட்சி தரும் வாயிலை அடைகிறோம். புதுவெள்ளம் பெருக்கெடுத்தோடும் வையைபோல, மக்கள் வெள்ளம் வழங்கும், அவ்வாயில் ஊடே, நெருக்கித் தள்ளிக் கொண்டு உட்புகுகிறாம். தெருக்கள் ஆறுபோல் அகன்று உள்ளன. தெருவின் இருமருங்கிலும் உள்ள வீடுகள், காற்றும் ஒளியும் நன்கு உட்புகுவதற்கு ஏற்ப, கணக்கிலாக் காலர்களைக் கொண்டுள்ளன. தெருவுகளில் போக்குவரவும் இடையற்றுப் போகா : எழும் பேரொலியும் இடையற்றுப் போவதில்லை. அத்தகு தெருவுகளில், நாளின் இருபத்து