பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

241


ஆகவே, இவ்வுதியன், பெரியவீரன் புலவர்களையும், பிற இரவலர்களையும் மேலும் பெரியவள்ளல். ஆனால் குருசேத்திரத்தில், போரிட்ட இருதிறப் படையினர்க்கும் உணவு ஆக்கிப் படைக்கும் சமயல்காரனாதல் ஆரிதிலும் அரிதாம்.

பெருஞ்சோறு படைத்த காலம் :

இப்புறப்பாட்டிற்கும், அது பாடிய புலவனுக்கும், அப்பாட்டுடைத் த லை வ னு க் கு ம் , கி. பி. ஐந்தாம் நூற்றுண்டிற்கும் முற்பட்ட காலத்தை வகுத்தல், பிறிதொரு வகையில் நோக்கிலும் நனிமிகப் பொருத்தமில் செயலாம்: அப்பாட்டின் முதல் ஆறுவரிகள், கட்புலனுக்கு உள்ளான இந்நிலவுலகை, சாங்கியத்தத்துவம் எந்த அடிப்படைக்கு உட்படுத்தி ஆய்வுசெய்யுமோ, அந்த அடிப்படையினவாய, ஐவகைப்பட்ட நிலைபேறுடைய உணர்வுகளின் இயற்கைகளாம். ஐம்பெரும் பூதங்களின், கற்பனைவளம் சார்ந்த எண்ணிக்கை வகைப்படுத்தி அளிக்கின்றன. இது போலும் குறிப்பீடுகள், தமிழர் உள்ளங்களை, ஆரியக் கருத்துக்கள் முழுமையாகக் கவர்ந்துவிட்ட பின்னரேஇடம் பெறக்கூடும். அதுபோலவே, பிற்காலப் பாக்களில் மட்டுமே இடம் பெறும் பொன்முடி சூடிய இமயமலை பற்றிய குறிப்பும் இடம் பெற்றுளது: அகச்சான்றுகளைக் கொண்டு மதிப்பிடும் நிலையில், பெருஞ் சேரலாதன் குறித்து, அவன் காலப் புலவர் ஒருவர் பாடிய பாட்டு, உதியன் குறித்து, அவன்காலப் புலவர் ஒருவர் பாடியபாட்டினும், காலத்தால் முற்பட்டதாம் ஆதலின், பெருஞ்சேரலாதனுக்குப் பிறகு வாழ்ந்தவன் உதியன், எள நாம் முடிவு செய்யலாம்.

பதிற்றுப் பத்து :

இவ்வுதியனுக்குப் பிறகு அரசு கட்டில் ஏறிய அரசர்கள் பற்றிய செய்திகளைப், பதிற்றுப் பத்திலிருந்து பெறலாம்.

த.வ.II-16