பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

481

புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன்னிசை ஆர்ப்பு.”
  -அகம் : 45

குறுக்கைப் பறந்தலைப் போரில், அன்னியால் வெட்டி வீழ்த்தப்பட்ட திதியனின் புன்னை நிலைகண்டு கண்கலங்கியுள்ளார் புலவர் கயமனார்.

“அன்னி குறுக்கைப் பறந்தலைந் திதியன்
தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்லிணர்ப் புன்னை, ”
  -அகம் : 145


மாமூலனார் பாடிய திதியின் அன்னிமிஞிலியின் துயர் துடைத்தோனாகப் பரணரால் பாராட்டப்பெற்ற அழுந்துார்த் திதியனே ஆயினும், எவ்வி அடக்கவும் அடங்காது வந்து புன்னையை வெட்டி வீழ்த்திய அன்னியை வெற்றி கொண்டவனாக, நக்கீரராலும், வெள்ளி வீதியாராலும் , கயமனாராலும் பாடப்பெற்ற, குறுக்கைப் பறந்தலைப் போர்த் திதியனே ஆயினும், மாமூலனார் பரணர் காலத்தும், நக்கீரர் காலத்தும் வாழ்ந்த முதுபெரும் புலவரே ஆவர்.

9. நன்னன்: நன்னனுக்கு உரியது பாழி; அது பிறர் அணுகலாகாக் காவல் அமைந்தது. “நன்னன் பாழி அன்ன கடியுடைவியன் நகர்” (அகம் : 1.5) :நன்னன், வேளிர் வழி வந்தவன் ; வியலுர்க்கு உரியவன். “நன்னன் வேண்மாள் வயலைவேலி வயலுர்” (அகம் 97) . நன்னன் ஏழிற் குன்றத்துக்கும் உரியவன். “நன்னன் நன்னாட்டு ஏழில் குன்றம்” (அகம் : 349.) நன்னனைக்குறித்து மாமூலனார் கூறுவன இவை.

நன்னன் வேளிர் வழிவந்தவன் : அவனுக்குரிய பாழி அரியகாவல் உடையது ; அதனால், வேளிர், தங்கள் பொ. செல்வங்களை அப்பாழிக்கண் வைத்துக் காத்து வந்தனர். நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதி வேளிர் ஒம்பினர் வைத்த பொன்”, “பாழிஆங்கண், வேன்