பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

தமிழர் வரலாறு


(The Ancient History of Tondai mandalam) என்ற நுால்களின் ஆ சி ரி ய ரு ம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்த்தில் வரலாற்றுத் துறையில் பணிபுரிந்தவரும் ஆகிய, ஆர். சத்திய நாத அய்யர், தம்முடைய நூல்களில், தென்னாட்டு மீதான படையெடுப்பு மேற்கொண்டவன் மெளரியப் பிந்துசாரனே எனக் கூறியுள்ளார்.

அவருடைய, இந்திய வரலாறு என்ற நூலின் நான்காம் அதிகாரத்தில், பிந்துசாரன் (கி. மு. 301-273) என்ற பெருந்தலைப்பின் கீழ் உள்ள, "தென்னிந்திய வெற்றி" என்ற குறுந்தலைப்பின் கீழும் பக்கம் : 121. "தொண்டை மண்டலத்தின் பண்டைய வரலாறு" என்ற நூலில், "பிந்துசாரன்" என்ற தலைப்பின் கீழும் பக்கம் : 10. பின் வருமாறு கூறியுள்ளார்.

"அசோகனின் பேரரசில், விந்தியத்திற்கு அப்பாற்பட்ட நிலப்பரப்பின் பெ ரு ம் ப கு தி யை இணைத்திருப்பது, அப்பகுதியின் வெற்றி குறித்துக் கேள்வி எழுப்பியுளது. கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவரான சந்திரகுப்தனுக்கு, அதுபோலும் வெற்றியை உரியதாக்கும் தெளிவான அகச்சான்று எதுவும் இல்லை. அசோகன் பெற்ற வெற்றி, கலிங்கம் ஒன்றே என மதிப்பிடலாம். திபேத்திய வரலாற்றுப் பேராசிரியர் தாரநாதன் என்பார், கெளடல்யன் துணையோடு, 16 பெருநாடுகளை அழித்துக், கிழக்கு மேற்குக் கடற்கரைகளுக்கு இடையிலான நாடுகளை இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியைப் பிந்துசாரனுக்கு உரியதாக்குகிறார். கெளடல்யனுக்கும் பிந்துசாரனுக்கும் உள்ள உறவு, "ஆரிய மஞ்சூரி முலகப்பா" என்ற நூலின் ஆசிரியரான ஏமச்சந்திரராலும் உறுதி செய்யப்பட்டுளது. "பிந்துசாரன் அரியணை ஏறும்போது நனிமிக இளையன். ஆகவே அவனுடைய தென்னாட்டுப் படையெடுப்பு, அவன் ஆட்சிக்காலத்தில், அதாவது, கி. மு. 298க்கும், கி. மு. 278க்கும் இடையிலான காலத்தில் நடைபெற்றிருக்க வே ண் டு ம் என்கிறார் ஏமச்சந்திரர். தாரநாதர் குறிப்பிடும் 16 அரசுகளின்