பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

தமிழர் வரலாறு

“தன் பால் முறை நாடி வருவார் கூறும் வழக்கினை தாடி, எவரிடத்தும் முகங்கொடுத்து விடாது, நடுவு நிலைமையில் இருந்து, குற்றம், குற்றத்திற்காம் தண்டம் ஆகியவற்றை அத்துறை வல்லாரோடு ஆராய்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வதே நீதி ஆகும்” என்கிறது குறள்.

“ஓர்ந்து, கண்ணோடாது, இறைபுரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை” —குறள் : 541.

“இவ்வுலகையும் மறு உலகையும் தண்டம் தான் காக்கிறது. நீதி வழங்குவதில், தன் மக்களையும், பகைவர்களையும், அரசன் ஒரு சேர மதிக்கவேண்டும். தர்மத்தையும் நடு நிலைமையையும் மதித்து, எவன் ஒருவன் தண்டம் வழங்குகிறானோ அவன் ஒருவனே உலகம் அனைத்தையும் வெற்றி கொள்வன்” என்கிறது அர்த்த சாஸ்திரம்.

தண்டொஹி கெவலொ லொகம் பரம் செமம் ரக்ஷதி
ராஜ்ஞாபுத்ரெ சஸ்த்ரௌ சயத் ஹாதொஸம் சமம் த்ற்த்ஹ்
அனுஷா சத்தி தர்மெண வ்யவஹாரெண, சம்ஸ்தயா
ந்யாயென ச சதுர்த்ஹென சதுரன் தாம் மஹீம் ஜயெத்.

—அர்த்த சாஸ்திரம். நூல் : 3 : அதிகாரம் 1.

“நாட்டை அறநெறியில் காக்கவேண்டிய அரசன், அவ்வாறு காக்காது போயின், அறம் கெட்ட அவன் நாட்டில், ஆக்கள், தம் பாற்பயன் தருவது குறைந்து விடும்; அந்தணர் தம் அற நூல்களை மறந்து விடுவர்” என்கிறது குறள்.

“ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர்;

காவலன் காவான் எனின்.”

—குறள்: 560.

தண்டமும் நீதியும் நன்கு செயல்படுத்தப்படாது விடப்படுமாயின், மூன்று வேதங்களும் அவற்றின் அனைத்து தற்செயல்களோடு மறைந்து போகும். நாடாளும் அரசனின்