பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பு

செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பு என்பது வெறும் கட்டுக் கதை என்கிறார் திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள். செங்குட்டுவன் வடநாட்டிற்குக் கொண்டு சென்ற படை, உண்மையில் பெரும்படைதான். அப்படை நூறுதேர், ஐந்நூறு யானை, பத்தாயிரம் குதிரை, அதற்கேற்புடை எண்ணிக்கையராகிய வீரர், அரசியல் பணி புரியும் தூதுவர் போலும் சட்டையிட்ட பிரதானிகள் ஐந்நூற்றுவர், படைவீரர்க்குச் சோர்வு ஏற்படும் போதெல்லாம், ஆடியும், பாடியும், நகைச்சுவை ஊட்டியும் ஊக்கம் ஊட்டும் கலைவாணர் முந்நூற்று அறுபதின்மர், படைக்கலம், உணவு போல்வன ஏற்றிச்செல்லும் வண்டிகள் ஆயிரம் ஆகியவற்றைக் கொண்ட பெரும்படை என்கிறது கால்கோட்காதை.

“நாடக மகளிர் ஐம்பத்திருவரும்,
கூடிசைக் குயிலுவர் இருநூற்றெண்மரும்,
தொண்ணூற்றறு வகைப் பாசண்டத்துறை
நண்ணிய நூற்றுவர் நகைவேழம்பரும்,
கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற்று இரட்டியும்,
கருங்களி யானை ஒர் ஐஞ்ஞூறும்,
ஐ யீராயிரம் கொய்யுளைப் புரவியும்,
மெய்யா வடவளந்து இருபதினாயிரம்
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்,
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ்சுக
முதல்வர் ஈரைஞ்ஞூற்று வரும்,
சேயுயர் விற்கொடி செங்கோல் வேந்தே!
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப.

-கால்கோள்காதை : 128-140.