பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

536

தமிழர் வரலாறு

மக்களை, நால் வருணத்தவராகக் கொள்வதே” [To Tolkappiyanar, the ideal social organisation was the division of people into four Varanas page 212] என அவர் கூறுவது காண்க.

தமிழரிடையே இடம் பெற்றுவிட்டதாகத் திரு. அய்யங்கார் கூறும் பிறிதோர் ஆரியக் கோட்பாடு சகுனம் பார்த்தல். அதுகூறும் “விருந்துவரக் கரைந்த காக்கை” (குறுந் : 210): “புள்ளும் பொந்தும் பழித்தல்” (புறம் : 204) வரிகளைப் பதினேழாம் அதிகாரத்தில், “நல்ல நல்லோர் வாய்ப்புள்” (முல்லைப்பாட்டு : 18) என்ற வரியினை இருபத்தேழாம் அதிகாரத்திலும் எடுத்தாண்டிருப்பதோடு, “மூடநம்பிக்கைகள் மக்களிடையே இடங்கொண்டிருந்தன.” [Superstitions prevailed among the people], “சகுனத்தில் ஆழமாக இருந்தது”[Belief in omens was rampant. page : 274) எனவும் கருத்தறிவித்திருப்பதன் மூலம், அவை கூறும் சங்க இலக்கியங்கள், கி. பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாம் எனக் கூறாமல் கூறியுள்ளார்.

சகுனம் பார்க்கும் வழக்கம், தமிழரிடையே பண்டே இருந்தமையால், தமிழர் வாழ்க்கை பற்றிய இலக்கணமாம் தம்நூலில் தொல்காப்பியர் சகுனத்திற்கான இலக்கணத்தையும் கூறியுள்ளார்.


தான் விரும்பும் காதலனோடு, அவனுார் சென்றுவிட்ட மகளைத் தேடிச் செல்லும் நற்றாயின் கூற்றுக்களுள் ஒன்றாக, “மகள் வருவாளா? எப்போது வருவாள்!” என்பதறிய சோதிடம் வல்லானிடம் கேட்பதாம் “மன்னு நிமித்தம்” (தொ. பொ. 39) என்ற துறையினையும், பகைநாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து செல்லும் வெட்சி வேந்தன் செயல்களுள் ஒன்றான நற்சொல் கேட்டலாம். “பாக்கத்து விரிச்சி” என்ற துறையினையும் (தொ. பொ. 61.] பொருள் தேடிப் போகும் தலைவன் குறிப்பைத் தலைவி பால் கூறவும், போகும் தலைவரைப் போகாவாறு தடுக்கவும், போன தலைவன்