பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

533

இம்மை, மறுமை, ஊழ்வினை எனப்பொருள்படும் பால் ஆகிய இக்கொள்கைகள், திரு. அய்யங்கார் அவர்கள் கூற்றுப்படி, தமிழர் உள்ளத்தைக், கி. பி. ஐந்தாய் நூற்றாண்டில் கொள்ளை கொண்டவை அல்ல. அவை, அவர்கள், உள்ளத்தைத், தொல்காப்பியர் காலத்துக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கொள்ளை கொண்டு விட்டன. அதனால் தான் தொல்காப்பியர். அவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

“பால் வரை தெய்வம் வினையே பூதம்”

—தொல் : சொல் : 53:


“ஒன்றே, வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப”

—தொல் : பொருள் : 10

என்ற அவர் சூத்திரம் காண்க.

ஆக, நல்வினை தீவினை பற்றிய கொள்கைகள்.. தமிழரிடையே, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இடம் பெற்றிருந்தன என்பது உறுதியாகிறது.

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் என்ற தலைப்புள்ள 22 ஆம் அதிகாரத்தில், சோழன் நலங்கிள்ளி என் வாழ்க்கை பற்றிய ஆய்வில், அவனைக், கோவூர்கிழார் பாடிய பாட்டில் பொருளும், இன்பமும், அறத்தின் பின்னாதல்போள், சேர பாண்டியர்களின் வெண்கொற்றக் குடைகள் தாழ்ந்து பின்வர் அவன்குடை முழுமதிபோல் உயர்ந்து முன் செல்லும் அவன் பெருமை கூறும்,

“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்துவழிப் படூ உம் தோற்றம் போல