பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

542

தமிழர் வரலாறு

பேராசிரியர்கர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று; ஆகவே, இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில், கி. மு. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னரே போக்குவரத்து இருந்திருக்க வேண்டும். இதையும், திருவாளர் அய்யங்கார் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்; அரசியல் தொடர்பு மட்டுமல்லாமல், மொழிகளுக்கிடையே சொல் மாற்றம் ஏற்பட்டிருப்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

“கிறித்தவ ஆண்டு பிறப்பதற்கு முந்திய 500 ஆண்டுகளில் ஐரோப்பாவுடனான இந்த இந்திய வணிகத்தில், கிரேக்கர்கள் பெரும் இடைத்தரகர்களாக இருந்தனர். ‘உலகப் பெருநாடுகளுக்கு இடையிலான இந்த விரிவான வாணிகப் போக்குவரத்தின் ஒரு விளைவு, தென்னாட்டு வணிகப் பண்டங்களின் தமிழ்ப் பெயர்கள், கிரேக்கப் பழங்குடியினரின், தூய கிரேக்க மொழியால் கடன்வாங்கப்பட்டன.” (The Greeks were the greatest intermediaries of this trade of India, with Europe, in the half-millennium, that preceded the birth of Christ. One result of this extensive international commercial intercourse was, that the Tamil names of South Indian articles of trade were borrowed by the Hellenes. Page: 193-94.) என அவரே கூறியிருப்பது காண்க.

ஆக, பத்துப்பாட்டு எட்டுத்தொகைப் பாடல்களால் பாடப்பெற்றிருக்கும் அரசர்களைக் காட்டியோ, அப்பாக்களில் கோயில் கொண்டுவிட்ட ஆரியக் கடவுள்களை வழிபட்டோ, அப்பாக்களில் இடம் பெற்றுவிட்ட ஆரியக் கோட்பாடுகளை ஏற்றோ, அப்பாக்களில் ஒளிகாட்டும் விண்மீன்களைக் கண்டோ, அப்பாக்களைக் கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நாற்றாண்டிற்குக் கொண்டுவந்து நிறுத்தும்