பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தமிழர் வரலாறு


பிரித்வேஸ்வனிலிருந்து பதினெட்டு அரசர்கள், அல்லது பதின்மூன்று தலைமுறைகளுக்கு முன்னே வைக்கப்படும், அவ்வரச குலத்தைத் தோற்றுவித்த முதலாம் மல்லன், திரிநேத்திரனோடு நட்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுளது. ஆனால், இதுவும் நமக்கு மேற்கொண்டு உதவவில்லை.

தெலுங்குச் சோடக்கல்வெட்டுக்களில், திரிலோசன பல்லவன், கரிகாலச் சோழனின் சம காலத்தவனாகக் காட்டப்பட்டுள்ளான். (4469 of 1919 S. 1153 M. E. R. 1920 P. 111-117) அவர்களின் கணக்கிலாக் கல்வெட்டுக்கள் அனைத்தும், தங்களின் புகழ்வாய்ந்த குலமுன்னோனைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் சில. உண்மையில், பிற்காலச் சோழர்களின் தென்னாட்டுக் குடிவழிப் பட்டியல்கள், குண்டூர் மாவட்டத்தில் கல்வெட்டுக்களை வெட்டியவனாகத் தெரியவரும் விஷ்ணுவாகு பிறந்த ஒரு பிரிவினராகிய, அயோத்தியாவைச் சேர்ந்த சூரிய குலத்தவனாகத் தங்கள் குல முதல்வனைக் கொள்வது போலவே அவனுக்கு வட இந்தியப் பிறப்புரிமையை அளிக்கின்றன. அவை, அவனைப் பல்லவத் தலைநகர் காஞ்சியோடுதொடர்புபடுத்துவதும் செய்கின்றன. அப்பட்டியல்களில் நீண்ட இடைவெளி நிரப்பப்படாமல் விடப்பட்டிருப்பதால், இக்கல்வெட்டுக்களிலிருந்து, தொடர்புபடுத்தும் குடிவழிப்பட்டியில் ஒன்றை உருவாக்குவது இயலாது. அக்கல்வெட்டுக்கள் சிலவற்றில், இடம் பெற்றிருக்கும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, திரிலோசனனோடு, கரிகாலன் கொண்ட தொடர்பு ஆகும். ஒரே காலத்தைச் சேர்ந்த தெலுங்கு, தமிழ் இலக்கியங்களில், இது, முறையாக, வரலாற்று நிகழ்ச்சியாக ஆக்கப்பட்டுளது. மெக்கனிஸ் அவர்களின் (Machenzie) கையெழுத்துப் படிகளில் ஒன்று, இது குறித்த தனிக்கவனத்தை ஈர்க்கிறது. இவ்வரலாற்றுச் சான்றுகளின் பெருங்குவியலிலிருந்து, க ரி கா ல னு ம், திரிலோசனனும் சமகாலத்தவர் என்ற கருத்து, மக்களிடையே பதினோறாம் நூற்றாண்டடில், மிகப் பெருமளவில் இடம் பெற்றுவிட்ட நம்பிக்கையாக இருந்தது எனக்கொள்ளலாம். பிற்காலக் கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும், இடம்