பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

---x---

நிறுவி அதற்குத் துணைபுரியவும் முன்வந்தார்கள். அங் அந்நாளில், அண்ணாமலை நகரில் தமிழிசை மாநாட்டின் சார்பாக நடைபெற்ற இசைப் பாடல் இகவில் நண்பர் பெரியசாமியவர்கள் பாடல்கள் வெற்றியடைந்து பரிசு பெற்றன. அது கண்டு அகமகிழ்ந்த நண்பரவர்கள் வேறு ஊதியஞ் சிறிதுங் கருதாமல் தாம் பாடிய இசைப்பாடல்களெல்லாவற்றையும் சுரதாளக் குறிப்புக்களுடன் பல்கலைக் கழகத்திற்கு உரிமையோடு உதவினர். இஃது அவருடைய விரிந்த நோக்கத்தைப் புலப்படுத்துவதாகும்.

இவ்வாசிரியர் வாய்மை, நேர்மை, அடக்கம் முதலிய சிறந்த பண்புகள் வாய்க்கப்பெற்றவர். மூத்த பிள்ளையார், முருகன், கூத்தப்பெருமான், உமையம்மை, திருமால், திருமகள், கலைமகள் என்னுங் தெய்வங்களையும், ஶ்ரீஇராமகிருஷ்ண அடிகள் முதலானவர்களையும், புத்தர், ஏசுநாதர், முகமதுநபி யென்னும் மற்றைய மதத் தலைவர்களையும் பாடியிருத்தலால் கடவுட் கொள்கையில் நடுநிலையுடையாரென்பது தெரிகின்றது. ஆயினும் முருகப்பெருமான்பால் மிகவும் உள்ளம் ஈடுபட்டுள்ளவரென்பதை இந்நூல் முழுவதும் படித்தவர் அறிவர். இவர் பாடல்கள் யாவும் இசைவாணர்க்குப் பொருள் விளங்கத்தக்க எளிய நடையில் அமைந்திருத்தலும், தமிழிசைப்பாக்களென்ற பெயர்க்கேற்பப் பெரும்பாலுந் தமிழ்ச் சொற்களால் இயற்றப்பெற்றிருத்தலும் குறிப்பிடத்தக்கன. அன்றியும், மிகுதியான சங்கதிகள் இல்லாமலும், இசை வல்லுநர்கள் தாம் விரும்பியவாறு விரித்துப்பாடுவதற்கு இடங்கொடுத்தும், இசையறிவு படைத்த-மக்கள் அனைவரும் நெடுங்காலமாகக் கற்றுங் கேட்டும் இன்புற்றுவரும் இசைக் கலையின் உயிர்நாடிபோன்ற பல்வேறு இராகங்களில் பழைய தமிழிசை முறையைக் தழுவி எளிதாகவும், மாணவர்கள் விரும்பிக் கற்பதற்கு ஏற்ற புதிய மெட்டுக்களாகவும் அமைந்திருத்தல் பாராட்டற்குரியன. இத்தகைய சிறந்த பாடல்களை இயற்றித் தந்த ஆசிரியர்க்குத் தமிழிசை யுலகம் என்றும் நன்றி செலுத்தக்கடமைப்பட்டுள்ளது. இங்ஙனம் தமிழன்னையைத் தம் பாடல்