உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழிசைப் பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. காதல் மணப் பகுதி பாட்டு 22 இராகம் : கரகரப்பிரிய எடுப்பு காதல் மாமணம் தீதென் றுரைப்பதுவோ ? காரணங்களின்றியே - நாமே துணை எடுப்பு ஏதம் இதிலென்ன விளைந்திடும் கண்டீர்? ஈருளம் பொருந்திடா வாழ்வுநன் றாமோ? அடிகள் 19 தாளம்-ஆதி (கா) காத்தே இன்னல் அடைதல் சரியோ? (கா) தனித்ததோ, ஆண் பெண் சார்ந்ததோ வாழ்வு? தரைமீதினில் நமைப் போல், மனத்தினில் ஒருமை நாடிடாமல் வாழ்வு தன்னிற்புக நினைவுகொள்வா ருண்டோ? (கா) இருகண் களுமே ஒரு பொருள் கோக்கிடும் இயல் புடையதே வாழ்வு! திருமணம் புரிதல் தீவினைக்கோ? சேரும் காதல் உள்ளம் தன்னிலன்றோ இன்பம்! (கா) பாட்டு 23 இராகம்--காமவர்த்தினி தாளம் -- ரூபகம் எடுப்பு காதலில்லா வாழ்வு தனிலே கருதுமின்ப மேவுமோ ? (கா) துணை எடுப்பு கருத்தொவ்வா ஈருள்ளம் ஒன்றிக் கலந்து வாழ்ந்திடுமோ? கறையாரும் வாழ்வு தன்னைக் (கா)