பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20. சரம கவிராயர்

காவேரியாற்றின் கரையிலுள்ள தோணி புரியிலே பிறந்தான் பொன்னப்பன். அவன் தந்தை தமிழறிந்தவர்; தாய், பழங்கதை சொல்வதில் பேர் பெற்றவள். பொன்னப்பனை ஒரு பெரிய கவிராயனாக்கிவிட வேண்டும் என்பது தந்தையின் ஆவல். காலையில் நாலரை மணிக்கே தந்தை பையனை எழுப்பிவிடுவார்; சாலை வழியாக ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வார்; வழியெல்லாம் நிகண்டும் நன்னூலும் வாய்ப்பாடமாகச் சொல்லிக் கொடுப்பார். தலைகால் புரியாமல் பொன்னப்பன் கிளிப்பிள்ளை போல் தூக்க மயக்கத்திலே பாடம் சொல்லிக்கொண்டு போவான். தினந்தோறும் பாடம் ஏறிக்கொண்டே போயிற்று. பையனுக்கும் வெறுப்பும் வளர்ந்து கொண்டே சென்றது.

நாள்தோறும் மாலைப்பொழுதில் பொன்னப்பனுக்கு அவன் தாய் கதை சொல்வாள். அக்கதை பேய்க் கதையாகவே இருக்கும். ஒரு நாள் முண்டாசு கட்டி வரும் சண்டிக் கறுப்பன் கதையை அவள் சொன்னாள். அந்தக் கறுப்பன் நாற்பது முழக் கறுப்புத் துணியை வால்விட்டுத் தலையிலே கட்டிக்கொண்டு. கிறுதா மீசையை முறுக்கிக் கொண்டு பையனுக்குக் கனவிலே காட்சி கொடுத்தான். மற்றொரு நாள்