பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கவிதைச் சிறப்பு

கவிதை புனைவது ஒரு கலை. பூக்களைக் கட்டுவதும் ஒரு கலை. சொற்களைக் கட்டுவதும் பூக்களைக் கட்டுவதும் ஒன்று போன்றதே. கட்டப்பெற்ற பூக்களுக்குச் சரம்' என்று பெயர் கட்டப்பெற்ற சொற்களுக்குக் 'கவிதை' என்று பெயர்.

உரைநடையில் உள்ள சொற்கள் உதிரிப் பூ போன்றவை. கவிதையில் உள்ள சொற்கள் சரம் போன்றவை.

உதிரிப் பூக்களில் ஒன்றைத் தொட்டு எடுத்தால் அதுமட்டுமே வரும். அடுத்த பூ வராது. கட்டப்பெற்ற பூக்களில் ஒன்றைத் தொட்டெடுத்தால், அதைத் தொடர்ந்து ஆயிரம் பூக்களும் வரும். உரை நடைச் சொற்களில் ஒன்றை நினைத்தால் அது மட்டுமே நினைவுக்கு வரும். கவிதையில் உள்ள ஒரு சொல்லைத் தொட்டால் கவிதையின் கடைசிச் சொல்வரை நினைவுக்கு வந்துவிடும். -

நேற்றுப் படித்த நாளிதழ்களிலுள்ள உரைநடை இன்று நினைவிலிராது. நாற்பதாண்டுகளுக்கு முன்னே படித்த ஒ கவிதை நமது நினைவில் இருக்கும்.

தமிழ்ப் புலவர்களில் பலர்உளநூற் புலவர்கள். அவர்கள் கண்ட கனவே கவிதை. அது சொற்களைக் குறைப்பதற்காகவும் நினைவுக்குக் கொண்டு வருவதற்காகவும் தோன்றியது.