பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைச் சிறப்பு )ー 55

மேலேயுள்ளவற்றில் எட்டு எழுத்து ஏழானதையும், ஆறெழுத்து ஐந்தானதையும், ஐந்தெழுத்து நான்கானதையும் கண்டு இவ்வுண்மையை உணரலாம். . . . . . .

நினைவறாற்லுக்குக் கவிதைகள் துணைசெய்கின்றன என்பதை மேலே கண்டோம். கவிதைக்குத் துணை செய்வன அதிலுள்ள எதுகையும் மோனையுமே யாகும். எதுகையும் மோனையுமின்றிக் கவிதை அமையாது. அமைந்தாலும், அது நினைவில் அமையாது. z w

எடுத்துக்காட்டாக ? (চ கவிதையிலுள்ள முதல் சொல்லைத்தொடுங்கள். அதுவும் பூவாகவே இருக்கட்டும். மல்லிகையைத்தான் தொடுங்களேன். -- -

'மல்லிகையே வெண்சங்கா வண்டுத வான்கரும்பு வில்லி கணைதெரிந்து மெய்காப்ப-முல்லைமலர் மென்மாலை தோளசைய, மெல்ல நடந்ததே ururណល அந்திப் பொழுது' -

பல ஆண்டுகளுக்குப் முன்பு படித்த புகழேந்தியின் இந்த வெண்பா மல்லிகையைத் தொட்டதும், பொழுதில்தான் வந்து நின்றது. இடையில் எங்கும் தடைபடாமல் ஆற்றொழுக்காகச் சொற்கள் பின்னிப் பின்னி நடந்து, பொழுதில் வந்து நின்றதற்குக் கவிதையிலுள்ள எதுகையும் மோனையும் துணை செய்தன. மல்லிகை-வண்டு, வில்லி-மெய், மென்-மெல்ல, புன்-பொழுது என்பன மோனைகள் மல்லிகை-வில்லி, மென்மாலை-புன்மாலை என்பன எதுகைகள். இத்தகைய எதுகையும் மோனையும் சந்தியும் பிறமொழிகளுக்கு இல்லை.