பக்கம்:தமிழின் வெற்றி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புகள்

எப்படிப் புகழ்வேன் !: "புறவின் அல்லல்’ என்பது புற

நானூற்றில் 39 ஆவது பாட்டு. யார் குற்றம் : நள்ளி வாழியோ’ என்பது புறநானூற்றில்

149-ஆவது பாட்டு. மீண்ட குழந்தைகள் : இந்த வரலாற்றுக்கு ஆதாரமான

பாடல் வருமாறு :

நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை ; இவரே, புலன்உழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்; களிறு கண்டு அழுஉம் அழாஅல் மறந்த புன் றலைச் சிருஅர் மன்று மருண்டு நோக்கி விருந்திற் புன்கணுே உடையர் கேட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே.

(புறநானூறு, 46)

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலயமான் மக்களே யானேக்கு இடுவுழிக் கோவூர் கிழார் பாடி உய்யக் கொண்டது. - - - வாழைப் பாட்டு: இந்த வரலாற்றில் வரும் பாடல் தமிழ்

நாவலர் சரிதையிற் கண்டது. மாற்றிய பாட்டு : இதில் வரும் பாடல், சார்வ பெளமன் பாண்டியன் வாசலில் வந்து, அவன் புறப்படவில்லை யென்று பழியாகப் பாதி பாடி, அவன் வந்து வணங்கப் புகழாகப் பாதி பாடியது' என்ற குறிப்புடன் தமிழ் நாவலர் சரிதையில் உள்ளது. இவ்வரலாற்றில் வரும் பராக்கிரம பாண்டியன் தென்காசியிலுள்ள விசுவநாதர் திருக்கோயிலைக் '; ட்டியவன். தண்ணிர் குடித்தல்ல வோகும். யோனி தமிழ்

கற்றதே" என்பது பாடம்.