பக்கம்:தமிழின் வெற்றி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

இத்தப் புத்தகத்தில் வரும் பத்து வரலாறுகளும் தமிழ்ப் புலவர்களைப் பற்றியவை. அவர்கள் தம்முடைய கவித் திறத் தால் பிறரை வியப்புள் ஆழ்த்துவதும், குற்றம் தோன்முமன் மாற்றிச் சமாதானம் சொல்வதும், உயிரை மீட்பதும், தக்காரை வாழ்த்தித் தகாதவரைக் குறிப்பாகப் பழிப்பதும், பாடல்களை வசையாகத் தொடங்கி இசையாக மாற்றுவதும், மாறுபட்ட கருத்துடையவர்களேயும் மாற்றிம் பாராட்டுக் கூறச் செய்வதும் ஆகிய செயல்களே நிறைவேற்றுகிரு.ர்கள்; சோதனைகளில் வெற்றி பெறுகிருர்கள். தமிழ் வேறு, தமிழ்ப் புலவர்கள் வேறு அல்ல; ஆகையால் புலவர்களின் செந்தமிழ்ப் புலமை பல நில்களிலும் காரியத்தைச் சாதித்துத் தரும் வரலாறுகள் அடங்கிய இதற்கு, தமிழின் வெற்றி" என்ற பெயரை வைத்தேன்: .

இந்தப் புத்தகத்தில் புறநானூற்றுப் பாடல்களை ஒட்டிய வரலாறுகள் மூன்றும், தனிப்பாடல்களே ஒட்டியவை ஐந்தும், நூல்கள் எழுந்த வரலாறுகள் இரண்டும் உள்ளன. பாடன் களில் அமைந்த பொருளையும், அவற்ருேடு உள்ள குறிப்பு களேயும் கொண்டு நிகழ்ச்சிகளைக் கற்பனையிருல் விரித்து அமைத்து எழுதியவை இவை. .

இந்த முறையில் புது மெருகு', 'எல்லாம் தமிழ் என்ற பெயருடன் இரண்டு புத்தகங்கள் முன்பு எழுதியிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் உள்ள வரலாறுகளால் புலவர்களின் பெருமிதமும், ஆற்றலும், தமிழின் ஏற்றமும் வெளியாகும். வரலாற்றினிடையே வரும் தமிழ்ப் பாடல்களின் பொருளும் தெளிவாக விளங்கும். - - . . . . . . . . . .

1–11–52 கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/5&oldid=574769" இலிருந்து மீள்விக்கப்பட்டது