பக்கம்:தமிழின் வெற்றி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படிப் புகழ்வேன்!

கிள்ளிவளவன் சிங்காகனத்தில் வீற்றிருந் தான். அரசவை கூடியிருந்தது. அரசனுடைய சுற்றமாகிய அமைச்சர், படைத் தலைவர் முதலி யோரும் புலவரும் பாணரும் பிறரும் அவையில் அமர்ந்திருந்தனர். புலவர்கள் அன்று கிள்ளி வளவனுடைய இயல்புகளைப் பாராட்டிப் பல பாடல் களைப் பாடினர்கள். - -

ஒரு புலவர் அவனுடைய ஈகையைச் சிறப் பித்துப் பாடினர். 'கற்பகமும் காரும் தோல்வி யுறும்படி ஈந்து உவக்கும் பெரு வண்மை படைக் தவன். யார் எத்தனே முறை வந்தாலும் இல்லை யென்னமல் உதவும் பெருங் கொடையாளன்” என்று பாராட்டினர். அருகில் இருந்த புலவர்களும் பாணரும் அந்தப் பாடலே நன்முகக் கேட்டு இன்பும் றனர். அரசனுடைய ஈகையை நன்கு அறிக் தவர்கள் அவர்கள். ஆதலின் அரசன் கொடையிற் சிறந்தவன் என்பதை மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் உணர்ந்து சுவைக்க முடிந்தது. புலவர் கூறியது அத்தனையும் உண்மை யென் பதைத் தம்முடைய சிரக் கம்பத்தால் புலப்படுத் தினர்கள். ஈதலால் வரும் இசையைத் தேக்கிக் கொண்டவன் கிள்ளிவளவன் என்பதை அந்தப் பாடலால் புலவர் நிலை நிறுத்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/7&oldid=574771" இலிருந்து மீள்விக்கப்பட்டது