உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 எவ்வளவோ தமிழ் நாட்டிலேயே இன்னும் ஆற்றவேண்டிய பணி எவ்வளவோ இருக்கிறது. முடிந்து விட்டதா? பெரியாரோடு தீர்ந்துவிட்டதா? அண்ணாவோடு முடிந்துவிட்டதா? நான் கேட்கிறேன், பெரியார் அன்றைக்கு எடுத்து வைத்த - புராணங்களைக் கேலி செய்து பேசிய-பிரசங் கங்கள் இன்றைக்கு எதிரே உட்கார்ந்து இருக்கின்ற இளைய தலைமுறை எத்தனைப் பேருக்கு நினைவிலே இருக்கிறது? காலையிலே பெரியார் சிலை திறப்பு விழாவிலேகூட நான் சொன்னேன். பிள்ளையார் கதை தெரியுமா உங்களுக்கு என்று நான் கேட்டேன். அந்தக் கதையைச் சொன்ன பிறகு அத்தனைப் பேரும் வியந்தார்கள். அப்படியும் ஒரு கதையா என்று தங்கள் விழிகளை அகல அகலத் திறந்தார்கள். எதற்குத்தான் கதை இல்லை இந்த நாட்டிலே? ஆடவர்களாகிய நம்முடைய தொண்டையிலே இருக்கின்ற முடிச்சு எலும்பு இருக்கிறதே, இதற்குக்கூட உண்டே! இணைப்புகள் கதை அதுகூட இயற்கை என்றாவிட்டார்கள்-புராணீ இணைத் கர்கள்? இல்லையே! அதையும் கடவுளோடு தார்களே! புராணத்தோடு இணைத்தார்களே! இல்லை யென்று சொல்லிவிட முடியுமா? தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைகிறார்கள்! வேலையைப் பாருங்கள்! கடலைக் கடைகிறார்கள்! யார் யார்? தேவர்களும், அசுரர்களும்! எதைக் கட்டித் தெரியுமா? மேருமலையை