உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு! தலைவர்களுக்கு விழா எடுக்கிறோம் என்றால் தலை வர்களைப் பாராட்ட-தலைவர்களுடைய புகழை வெளிப் படுத்த மட்டுமே விழா எடுக்கிறோம் என்று பொருள் அல்ல. அவர்களுக்கு விழா எடுப்பது நம்முடைய சுயநலத் திற்காக. நம்முடைய சுயநலம் என்றால், அவர்கள் உரு வாக்கிய கருத்துக்களை நாம் முழுமையோடு பின்பற்றி, தொடர்ந்து லட்சியப் பயணத்தை நடத்துவதற்கு நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள இந்த விழாக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை அண்ணாவுக்கு பெரியாருக்கு - பேரறிஞர் மற்றும் பெரும் தலைவர்களுக்கெல்லாம் நாம் விழா எடுக் கின்றோம். தத்துவத்திற்கு - விழா எடுக்கின்ற நேரத்தில், தந்தை பெரியார் என்கின்ற தனிப்பட்ட ஒரு மனிதரையோ, பேரறிஞர் அண்ணா என்கின்ற தனிப்பட்ட ஒரு மனிதரையோ