உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பெரியார் தமிழ்ச் சமுதாயத்திற்கு - திராவிட சமூதாயத்திற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தேவையான கொள்கைகளை எடுத்துச் சொன்னபோது அவர் மதவாதிகளை எதிர்க்க நேரிட்டது. இதிகாசங்களை எதிர்க்க நேரிட்டது; புராணங்களைப்பற்றி விமர்சிக்க நேரிட்டது. அவைகளையெல்லாம் செய்யாமல் இந்தச் சமுதாயத்தை விழிப்படையச் செய்ய மார்க்கம் கிடையாது என்ற காரணத்தினாலேதான் தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய கொள்கைகளை - லட்சியங்களை கொஞ்சம் முரட்டுத்தனமாக எடுத்து வைத்தார். பக்குவம் வருமா? ஆரம்ப காலத்திலேயே அவ்வாறு முரட்டுத்தனமாக அந்தக் கொள்கைகளை எடுத்து வைக்கப்படாமல் இருந்திருக்குமேயானால் இன்றைக்கு அதை மென்மையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் தமிழர்களுக்கு ஏற்படாமல் போயிருக்கக்கூடும். எனவேதான் எடுத்த அடி கொடுக்கின்ற அடி பலமான அடியாக இருக்கவேண்டும் என்று தந்தை பெரியார் தன்னுடைய கொள்கையை - அவை கசப்பான வையாக இருந்தாலும் தின்றுதான் தீரவேண்டும் இல்லா விட்டால் நோய் தீராது என்று அழுத்தம் திருத்தமாக எடுத்து வைத்தார். அறிஞர் அண்ணா அவர்கள் அதைப் பக்குவமாக மக்களுடைய உள்ளத்திலே பதியவைக்கின்ற பணியினைச் செய்தார். இருவரும் ஒரே குறிக்கோளை நோக்கித்தான் நடந்தார்கள். ஒருவர், கரடுமுரடான பாதையானாலும் 'வா ; என்னுடைய காலிலே படுகின்ற காயங்கள் உன்னுடைய காலிலும் படட்டும்' என்று, மூட நம்பிக்கை யில் ஆழ்ந்து கிடந்த சமுதாயத்து மக்களை பயமின்றி ஏறச் சொன்னார். குறிக்கோள் என்ற குன்றின் முடிவுக்குத் தொடர்ந்து வா என்றார். அதுதான் பெரியார்!