பக்கம்:தமிழின எழுச்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

114 • தமிழின எழுச்சி

ஆரியர் கி.மு. 1500இலும் இந்தியாவிற்கு விந்தனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது தவறு. இருவரும் இந்தியாவின் குடிமக்களே.
4. கி.மு. 6000-த்தில் அகத்திய முனிவர் தமிழ்மொழிக்கு இலக்கணம்

செய்தார். மூன்று தமிழ்க் கழகங்களில் முதல் கழகம் கி.மு. 5800 முதல் 4800 வரையிலும், இரண்டாவது கழகம் கி.மு. 4800 முதல் 2800 வரையிலும், மூன்றாவது கழகம் கி.மு. 2800 முதல் கி.மு. 500 வரையிலும் இருந்தன பற்றிக் கருத்தரங்கு ஆராய்ந்து முடிவு செய்யும். அத்துடன் இலெமூரியா என்று சொல்லப் பெறும் குமரிக் கண்டம் பற்றியும் ஆராயப் பெறும்.

5. திரு. பாலகங்காதர திலகர் கூற்றுப்படி ரிக்வேத காலம் கி.மு. 6000

என்பதே உண்மை .

6. ஆரியர் என்ற சொல் ஓர் இனத்தைக் குறிக்கவில்லை . அப்படிச்

செய்வது மிகப் பெரும் கரிசு (பாவம்). அரவிந்தர், விவேகானந்தர், பி.கே.முகர்சி, நாமக்கல் இராமலிங்கம் (பிள்ளை ), ஈராசு அடிகள் போன்ற சிறந்த அறிவுல மேதைகள் (!) எல்லாம் ஆரியர் என்ற சொல்லை ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களைக் குறிக்கவே பயன்படுத்தியுள்ளனர்.

7. கருத்தரங்கம் எடுத்த முடிவுகளை நடுவண், மாநில அரசுகளும், பல்கலைக் கழகங்களும் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய ஓர் அறிஞர் குழுவை அமைத்து, ஆங்காங்கு அனுப்புதல் வேண்டும். அத்துடன் இப்பொழுதுள்ள மேலைநாட்டினர் எழுதியுள்ள பொய்யான கற்பனையான, தவறான வரலாற்று நூல்களை அப்புறப்படுத்தி, இனி பாரதப் பண்பாட்டிற்கு உகந்த முறையில் புதிய வரலாற்று நூல்களை எழுதுதல் வேண்டும்.

- இவையே அக்கருத்தரங்கின் முகாமையான நோக்கங்களாகவும் செய்யவேண்டிய செயல்களாகவும் அறிவிக்கப் பெற்றுள்ளன. இவற்றின் அடிப்படையில் கருத்தரங்கைக் கூட்டியவர்களுக்கும், கூட்டச் செய்தவர்களுக்கும், அங்குக் கூடிக் கருத்துகளை வெளியிட்டவர்களுக்கும் தலையாய மூன்று உள் நோக்கங்கள் இருப்பனவாகத் தெரிகின்றன.

1. இந்திய ஒருமைப்பாட்டுக்கு உகந்தபடி ஏற்கனவே உள்ள வரலாற்றை மாற்றி யெழுதுவது.