பக்கம்:தமிழின எழுச்சி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 209

வகை, சங்க காலப் புலவர், சமதர்ம விளக்கம், இல்லறமாண்பு, சங்க இலக்கிய மாண்பு, மக்களும் அமைப்புகளும், தென்னகப் பண்பு, முதலியன; இலக்கியவியலில், சங்க இலக்கிய மாண்பு, செந்தமிழ்ச்செல்வம், சிலம்பு வழங்கும் செல்வம், உலக இலக்கியங்கள், மேனாட்டு இலக்கியக் கதைகள் (இரண்டு பகுதிகள்), அன்னை அருங்குறள் முதலியன. திருக்குறள் தொடர்பாக-வள்ளுவர் நிழல், திருக்குறள்மணி விளக்கவுரை (6 பாகங்கள்), திருக்குறள் தெளிவுரை, திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு (ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் Mind and Thought of Thiruvalluvar) முதலியன; அறிஞர்கள் வரலாற்று வரிசையில், ஆங்கிலப் புலவர் வரலாறு, அறிவுலக மேதை பெர்னார்டுசா, ஓவியக் கலைஞர் இரவிவர்மா, சேன்அயர், பெஞ்சமின் பிராங்களின், அறிவியல் முனைவர் ஐன்சுடீன், தளவாய் அரியநாதர், கிருட்டிண தேவராயர், சுபாசு சந்திரபோசு, வில்லியம் கூப்பரின் கடிதம், டேவிட் லிவிங்சுடன், ஐதர் அலி முதலியன; பொதுமை நூல்கள்-குடியரசு, பொதுவுடைமை, சமூக ஒப்பந்தம், முதலீடு (Capital), போதும் முதலாளித்துவம், மே விழா முழக்கம், உலகம் சுற்றுகிறது, உயிரின் இயல்பு. எம்.என்.இராய் இயற்பொருள்வாதம், வாழ்க்கைப் பயிற்சி, அறிவுக்கடல், இன்பத்துள் இன்பம் முதலியன; கதை நூல்கள் - இரு நகரக் கதை, சேச்சுபியர் கதைக் கொத்து (நான்கு பாகங்கள்), விருந்து வரிசை: மாமனார் வீடு, முத்துமாலை, கடல் மறவர், கல்மனிதன், துன்பக்கேணி, நூர்சகான், மன்பதைக் கதைகள் (6 பாகங்கள்), விந்தைக் கதைகள் (4 பாகங்கள்), யாழ் நங்கை, மலை நாட்டு மங்கை, யுத்தக் கதைகள் முதலியன.

இனி, எழுத்தாக்கக் கொடுமுடியாகத் திகழும் நூல்கள், இவருடைய திருக்குறள் மணிவிளக்க உரை-6 பகுதிகளும், திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பும் (ஏறத்தாழ 1000 பக்கங்கள்), ஆகும், இனி, அவர் துணையாசிரியராக இருந்து தொகுத்த சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான 'ஆங்கிலத் தமிழ் அகராதி’ ஒரு செயற்கரிய செயலாகும். இதன் தலைமைத் தொகுப்பாசிரியராகத் திகழ்ந்தவர் மறைந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பர்.அ. சிதம்பரநாதனார் என்றாலும், அதன் முழுப் பணியும் நம் பன்மொழிப் புலவர் அவர்களையே சாரும் என்பதை அறிந்தார் அறிவர். இனி, இதன் அடிப்படையில், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்த 'ஆங்கிலத் தமிழ்க் கையகராதி' என்னும் ஏறத்தாழ 700 பக்கச் சிறு வெளியீடு மிகு பயனுடைய அரிய அறிவு நூலாகும்.

இத்தனை நூல்களை இவர் எழுதி வெளியிட்டிருந்தாலும், இவற்றாலெல்லாம் இவர்க்குக் கிடைத்த அறிவுக் கூலியோ மிக மிக எளிய சிறு