இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38
தமிழியக்கம்
மறை அறியார் எனினும் அவர்
மறையவராம் என்றுரைப்பார்!
இலக்கணத்தின்
துறையறியார் எனினும் அவர்
தூயதமிழ் எழுத்தாளர்
என்று சொல்வார்!
குறையுடையார் எனினும் அவர்
குதித்திடுவார் யாம் மேலோர்
கூட்டம் என்றே!
அறையிமிவை பெருந்தமிழர்
ஆழ்ந்தநெடுந் தூக்கத்தின்
பயனே அன்றோ! 94
இயற்கை எழில் என்னென்ன?
இனியதமிழ் நாட்டின்சீர்
என்ன? மற்றும்
செயற்கரிய நந்தமிழர்
என்னென்ன செய்தார்கள்?
செந்தமிழ்க்காம்
முயற்சி எவை நாட்டிற்கு
முடிப்பதென்ன ? இவையனைத்தும்
தனித்த மைந்த
வியத்தகுசெந் தமிழாலே
வெல்லத்துத் தென்பாங்கில்
பாடல் வேண்டும். 95