உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தமிழியக்கம்

மொழியழிப்பான் தனைப்பற்றி
    ஒரு மொழியும் மொழிவதில்லை
        மொழிந்தால் பார்ப்பான்
விழிநோகும் எனநடுங்கி
    வெண்ணீற்றுப் பதிகத்தை
        விரித்துச் சொல்லிப்
பழியாகத் தன்தாயைப்
     புணர்ந்தானைச் சிவன் உவந்த
         பாங்கும் கூறி
ஒழிவார்கள் ; தமிழ்மொழியை
     ஒழிப்பாரை ஒழிப்பதன்முன்
         ஒழியா தின்னல்! 99

உலகுக்குத் தமிழ்மொழியின்
     உயர்வுதனைக் காட்டுவது
         சொற் பெருக்காம்!
கலகத்தைச் சமயத்தைக்
     கழறுவதைக் காதாலும்
         கேட்க வேண்டாம்,
சிலகற்றார் பலகற்க
     விரும்பும்வகை செயல்வேண்டும்
         கல்லார் ஓடித்
தலையுடைத்துக் கொளவேண்டும்!
     தன்னலம் இல்லார் சொல்லால்
         எல்லாம் எய்தும்! 100