பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்


என்றல் இழுக்காகும் நற்கு எளிது

ஆகி விடினும் நளிர்வரைமேல்

கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்'

(பழமொழி.48)

(6) உறுதி - strong

'மறுமனத்தன் அல்லாத மாநலத்த

வேந்தன் உறுமனத்த னாகி

ஒழுகின் - செறுமனத்தார் பாயிரம்

கூறிப் படைதொக்கால் என்செய்ப

ஆயிரம் - காக்கைக்கோர் கல்'

(பழமொழி.249)|

(7) வன்மை - hard hearted

'... ... .. கல்லன்னர் வல்லென்ற

நெஞ்சத் தவர். (நான், 34:3-4)

(8) இழிவு - lowly

'புறவினில் புரளும் கல்லும்

புண்ணியன் ஆக - என்றான்'

(நீலகேசி.444: 4)

(9) கெட்டித்தன்மை, உறுதி, வலிமை

- hardness, firm, strong

'பேயல்லவோ ஒருவேளை வரம்

தந்து பேசிடும் கல்லாயல்லவோ

நின் மனம் கெட்டியானதும்

அற்புதம் தான்' (தனிப்.575: 1-2)


(ஆ) கல்லெறிதல் Kallerital

(10) எதிர்ப்பு - oppose

'சொல்லெதிர்ந்து தம்மை

வழிபட்டு ஒழுகலராய்க்

கல்லெறிந்தாற் போலக்

கலாந்தலைக் கொள்வாரை

இல்லிருந்தாற்ற முனிவித்தல்

உள்ளிருந்து அச்சாணி தாங்கழிக்கு

மாறு' (பழமொழி.112)


(இ) கல் கிள்ளுதல் Kal killutal

(nip the stone)

(11) பேதைமை - ignorance

'தங்கண் மரபில்லார் பின்சென்று

தாம்.அவரை எங்கண் வணக்குதும்

என்பவர் - - பின்கேண்மை

நற்றளிர்ப் புன்னை மலரும்

கடற்சேர்ப்ப! கல்கிள்ளிக் கை

இழந்தற்று' (நாலடி.336)


(ஈ) உலம் (திரண்ட கல்) Ulam

(12) திண்மை – hard / firm

'உலம்கெழு வயிரத் திண்தோள்

ஒளிமுடி அரசன் செம்மல்'

(சூளா .322: 2)


கல்லவடம்


(ஒப்பு) Stone - அடிப்படை,

அண்டம், அமைதி, இலிங்க உரு,

எதிர்கொள்ளல், ஒளி,

கடினத்தன்மை , சாட்சி, சுதந்திரம்,

சூரியன், நினைவு, நெருப்பு,

புதிர்நிலை வாழ்க்கை , புற

ஆன்மா , பூமி, வலிமை;

கடுவெறுப்பு, தடை

மே.காண். 'நடுகல்'


கல் (நடுகல்) Kal (natukal) (hero stone)

(1) கடவுட்டன்மை - divine

தொழாதனை கழிதல் ஓம்புமதி

வழாது வண்டு மேம்படூ உம், இவ்

வறநிலை ஆறே - பல் ஆத்திருள்

நிரை பெயர்தரப் பெயர்தந்து,

கல்லா இளையர் நீங்க நீங்கான்,

வில் உமிழ் கடுங் கணை மூழ்க,

கொல் புனல் சிறையின்

விலங்கியோன் கல்லே'

(புறம்.263: 2-8)

(2) வீரம் - brave

ஒன்னாத் தெவ்வர் முன்நின்று -

விலங்கி, ஒளிறுஎந்து மருப்பின்

களிறுஎறிந்து வீழ்ந்ததென,

கல்லே பரவின் அல்லது நெல்

உகுத்துப் பரவும் கடவுளும்

இலவே' (புறம்.335: 9-12)

(3) வெற்றி - success

'நெடுஞ்சேண் நாட்டில்

தலைத்தார்ப் பட்ட கல்லா எழினி

பல்எறிந்து அழுத்திய வன்கண்

கதவின் வெண்மணி வாயில் மத்தி

நாட்டிய கல்கெழு பனித்துறை'

(அகம்.211: 12-15)

கல் (சாணைக்கல்) Kal (cataikkal)

(whetstone)

(1) வலிமை - strength

'சிறுகாரோடன் பயினொடு

சேர்த்திய கற்போல் நாவினே

னாகி மற்று அது' (அகம்.356: 9-10)

கல்லவடம் (ஒரு வகைப் பறை)

Kallavatam (a drum)

வெற்றி, களிப்பு

‘கொல்லை விடைமுன் பூதம்

குனித்தாடும் கல்ல வடத்தை