பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குருகு


தளிர்க்கும் குருகிலை நட்டார்

வழங்கத் தளிர்க்குமாம் மேல்'

(நான்.38)

குருகு Kuruku |

(1) தலைவன்

'இறவு அருந்தி எழுந்த கருங் கால்

வெண் குருகு .. .. .. .. கருங்

கோட்டுப் புன்னை

இறைகொண்டனவே ' (நற்.67:3-5)

(2) தனிமை - lonely

'தன் துணைப் பிரிந்து அயாஅம்

தனிக் குருகு உசாவுமே'

(கலி.121: 16)

(3) ஆராய்தல், அறிவு, கல்வி -

knowledge, wisdom, learning

'கல்வி கரையில கற்பவர் நாள் சில

மெல்ல நினைக்கின் பிணிபல

தெள்ளிதின் ஆராய்ந்து

அமைவுடைய கற்பவே

நீரொழியப் பாலுண் குருகின்

தெரிந்து' (நாலடி.135)

(4) மக்கள்

'கோலச் சிறுகுருகின் குத்தஞ்சி

ஈர்வாளை - நீலத்துப்

புக்கொளிக்கும் ஊரற்கு'

(ஐந்.ஐம்.24: 1-2)

(5) மௌனம் - silent

'அடையல் 'குருகே அடையலெங்

கானல் உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு

உறுநோய் உரையாய் அடையல்

குருகே 'அடையலெங் கானல்'

(சிலப். 7. 46)

(ஆ) குருகு உயரப்பறத்தல்

Kuruku uyarap parattal

(6) நன்மை - good omen

'குருகும் இருவிசும்பு இவரும்'

(குறு.260: 1)

(இ) கொக்கு Kokku

தலைவன்

கொழுஞ் சுளைப் பலவின் பயம்

கெழு கவாஅன், செழுங் கோள்

வாங்கிய மாச் சினைக் கொக்கினம்

மீன் குடை நாற்றம் தாங்கல்

செல்லாது, துய்த்தலை- மந்தி

தும்மும் நாட!' (நற்.326: 1-4)

(7) கூரிய பார்வை


குருதி


'பார்வல் கொக்கின் பரிவேட்பு

அஞ்சா ' (பதி.21: 27)

(8) திறன், அமைதி - capable, patience

கொக்கொக்க கூம்பும் பருவத்து ..

.....' (குறள்.490)

(9) கொள்கைப் பிடிப்பு, உறுதி,

பொறுமை - strong principle,

patience

'என்ன ஆயினும் மன்னது

விழையாது ஒடுங்கி இருந்தே

உன்னியது முடிக்கும் கொடுங்கால்

கொக்கின் கோளினமாகி'

(பெருங். மகத.17: 60-62

(ஈ) நாரை Narai

தலைவன்

இரை தேர் நாரை எய்தி விடுக்கும்'

(நற்.35:6)

(ஒப்பு) Stork, Crane அமைதி,

இருப்பிட மாற்றம், இளவேனில்,

பண்பு, உயரம், ஊக்கம்

தளராத ஆன்மா, எல்லையற்ற

கூர்மதியுடைய தன்மை, கடமை

உணர்ச்சி, கடவுட்பற்று,

கீழ்ப்படிதல், குடும்ப இணைவு,

சமய இயல்புகள், தன்விழிப்பு

நிலை, துடியார்வமிக்க - நிலை,

துறவு, தூய்மை, நன்மை,

நிலைபேறு, நீண்டநாள் வாழ்வு,

நீதி, பயணி, பற்றுறுதி, மகிழ்ச்சி,

மறுபிறப்பு, மனநிலை, வளமை,

விடியல்; அடிமைப்பண்பு,

கழிகாமம், கூடா ஒழுக்கம்,

பகட்டாரவாரம்.

குருதி Kuruti (blood)

(1) சிவப்பு நிறம்

'குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி'

(நற்.34: 2-3)

(2) உயிர், வாழ்வு - life, living

'விடர் முகைச் செறிந்த வெஞ்

சின இரும் புலி புகர் முக வேழம்

புலம்பத் தாக்கி, குருதி பருகிய

கொழுங் கவுட் கய வாய்' - -

(நற்.158: 5-7)

(3) பலி - sacrifice -

'உருவச் செந் தினை குருதியொடு

தூஉய்' (பதி.19:6)

(4) போர் - war


108