பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடி

கறுப்புக் கொடி

கடற்கொள்ளையர்,

குற்றவாளிகளின் செயல் முறை,

சிவப்புக் கொடி - அபாயம்,

அரசழிவு, அமைதிக்கேடு, ஏலம்,

குழப்பம், சமதர்மம், புரட்சி,

வெள்ளைக் கொடி - அமைதி,

சரணடைவு, தற்காலப்

போர்நிறுத்தம்.

மஞ்சள் கொடி - தொற்று நோய்

அபாயம்.

கொடி Koti (creeper)

(1) பெண்

கொடி ஒன்று நின்பனிக்கு எதிரே

சென்று கும்பிட்டாள் உயிர்

ஒன்றும் கொடு வந்தாளே'

(தனிப்.95:7-8)

(ஆ) வல்லி Valli

(2) மென்மை

'திருத்தம் பயிலும் சுனை

குடைந்தாடிச் சிலம்பெதிர்கூய்

வருத்தம் பயின்றுகொல்லோ

வல்லி மெல்லியல் வாடியதே'

(திருக்கோ .6: 62.3-4)

(3) அழகு

'காய்த்து நின்று கண்தெறூஉம்

காமர் வல்லி மாதரார்' (சீவக. 154:

2)

(4) பெண்மை

'கடிகமழ் பாரி சாதம்

அதனொடொர் காம வல்லி'

(சூளா . 1563: 5-6)

(இ) வல்லி நடுதல் Valli natutal

(4) மங்கலம்

'காய்க்குலைக் கமுகும் வாழையும்

வஞ்சியும் பூக்கொடி வல்லியும்

கரும்பு நடுமின்' (மணி.1: 46-47)

(ஈ) கொம்பர் இல்லாக் கொடி

Kompar illak koti (pole less creeper)

(25) துன்பம், அலமருதல் - woe,

depression

'கொம்பர் இல்லாக் கொடி போல்

அலமந்தனன்' (திருவா.6: 20. 1-2)


கொல்லி

கொடுங்குன்றின் நீள் குடுமி மேல் தேன்

விரும்பும் முடவன் Kotunkunrin

nilkutumi mel tén virumpum mutavan

(1) இயலாமை - helpless

'கோற்றேன் குளிர்தில்லைக்

கூத்தன் கொடுங்குன்றின்

நீள்குடுமி மேல் தேன் விரும்பும்

முடவனைப் போல மெலியு

நெஞ்சே ' (திருக்கோ .14: 150. 2-3)

கொண்டல் (கீழ்க்காற்று) Kontal

(easterly)

(1) வருத்தம் - grieve

'அழிதக வந்த கொண்டலொடு

படர்க் காமர் நெஞ்சம்

கையறுபு இனைய' (அகம்.40: 7-8)

கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்தல்

Kottaikku muhkar valikattuvittal (dumb

leading the blind)

(1) இயலாமை - inability

'எத்தைக் கொண்டு எத்தகை ஏழை

அமணொடு இசைவித்து எனைக்

கொத்தைக்கு மூங்கர்

வழிகாட்டுவித்து என்னக் கோகு

செய்தாய்' (திருநா. தேவா.2136: 1-4)

கொம்பு Kompu (pole)

(1) உதவி, அருள் - support, grace

'உழுந்து இட இடம் இலை உலகம்

எங்கணும் அழுந்திய உயிர்க்கு

எலாம் அருட் கொம்பு ஆயினான்'

(கம்ப.பால.703: 1-2)

கொல்லி Kolli (a mountain)

(1) உயர்வு - height

-'உரை சால் உயர் வரைக்

குடவயின்' (நற்.185:7)

(2) பயன்

'பயம் கெழு பலவின் கொல்லிக்

குடவரை' (நற்.192; 8)

(3) கடவுட்டன்மை - divine

'செவ் வேர்ப் பலவின் பயம் கெழு

கொல்லித் தெய்வம் காக்கும் தீது

தீர் நெடுங் கோட்டு' (நற்.201: 5-6)

(4) தண்மை


121