பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோங்கு


'கண்ணி கார் நறுங் கொன்றை;

காமர் வண்ண மார்பின் தாரும்

கொன்றை ' (புறம், கட, வா: 1-2)

(4) முல்லைத்திணை - forest tract

'கொன்றையும் குருந்தும் குலைக்

கோடலும்' (சூளா. 18: 1)

(ஆ) கடுக்கை Katukkai

(5) வளம் | மங்கலம்

'கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய'

(பதி.43: 16)

(இ) கொன்றை தார் Konrai tar

(6) புனிதம் - holy

'காரின்மலி கொன்றைவிரி

தார்கடவுள்'

(திருஞான தேவா. 1410: 5)

கோங்கு Kolku (a tree)

(1) அழகு

'புல் இதழ்க் கோங்கின் மெல்

இதழ்க் குடைப் பூ வைகுறு

மீனின் நினையத் தோன்றி'

(நற்.48: 3-4)

(2) வளமை - fertile

'வண் சினைக் கோங்கின் தண்

கமழ் படலை இருஞ் சிறை

வண்டின் பெருங்கிளை மொய்ப்ப

(ஐங்.370: 1-2)

ஆ) கோங்கு ஏறுதல் Konku

erutal

(3) பாதுகாப்பின்மை - unsafe

'தாமேயும் தம்மைப் புறந்தர

வாற்றாதார் வாமான்றேர்

மன்னரைக் காய்வ

தெவன்கொலோ ஆமா உகளும்

அணிவரை வெற்ப! கேள் ஏமாரார்

கோங்கேறி னார்' (பழமொழி. 282)

(இ) கோங்கம் Kohkam

(4) இளவேனில் - spring

'கோங்கம் குவி முகை அவிழ, .. ..

.. .. முற்றா வேனில் முன்னி

வந்தோரே!' (நற்.86:7-9)

(5) திண்மை - strong

'திணிக் கோங்கம் பயந்த

அணிமிகு கொழுமுகை உடையும்

பொழுதே' (ஐங்.343: 2-3)


கோடை

(6) தண்மை , நறுமணம்

'தண் நறுங் கோங்கம் மலர்ந்த

வரையெல்லாம் பொன் அணி

யானை போல் தோன்றுமே'

(கலி.42: 16-17)

கோசர் Kocar (a ruling tribe)

(1) வாய்மை - truthful

தொல் மூதாலத்துப் பொதியில்

தோன்றிய நால் ஊர்க் கோசர்

நன்மொழி போல' (குறு.15: 2-3)

(2) சூழ்ச்சி - intringue

ஒன்றுமொழிக் கோசர் போல

வன்கட் சூழ்ச்சியும்' (குறு.73: 4-5)

(3) புகழ்

'வாய்மொழி நிலை இய

சேண்விளங்கு நல்இசை

வளம்கெழு கோசர் விளங்குபடை

நூறி' (அகம்.205: 8-9)

கோட்டம் Kottam (கோட்ட மரம்)

(1) வெண்மை

'பால் வெண் கோட்டமும்

பனிச்சையும் திலகமும்'

(பெருங். உஞ்.50: 29).

கோடி Koti (crore)

(1) மிகுதி, பேரளவு, பெருமை -

much, large, great

'ஒன்று பத்து அடுக்கிய கோடி

கடை இரீஇய பெருமைத்தாக,

நின் ஆயுள்தானே!' (புறம்.18: 5-6)

கோடை kotai (மேற்காற்று)

(westerly)

(1) விரைவு - speed

'ததர் பிணி அவிழ்ந்த தாழை

வான் பூ, தயங்கு இருங் கோடை

தூக்கலின், நுண் தாது வயங்கு

இழை மகளிர் வண்டல் தாஅம்'

(நற்.299: 2-4)

(2) வெப்பம் - heat |

'அழல் எறி கோடை தூக்கலின்'

(அகம்.219:15)

(3) வறட்சி - drought

'கயன் அற வறந்த கோடையொடு

நயன் அற' (அகம்.291: 4)


123