பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாள் புகைதல்


தாள் புகைதல் Tal pukaital (smokey

star)

(1) தீமை

‘குளமீனொடுந் தாள் புகையினும்'

(புறம். 395: 35)

திகிரிப்புள் (சக்கரவாளப் பறவை)

Tikirippul |

(1) இணைபிரியாமை - inseperable

‘திணைவிராய்ப் பொய்கையும்

திகிரிப் புள்ளினுக்கு

இணையிராப் பிரிந்தபின்

எரியோடு ஒக்குமால்' (சூளா.1050:

1-2)

திங்கள் Tiikal (moon)

(1) காலம்

'திலகம் தைஇய தேம் கமழ் திரு

நுதல் எமதும் உண்டு , ஓர் மதி நாட்

திங்கள்'

(நற். 62:6-7)

(2) அறம்

அறுமீன் பயந்த அறம் செய்

திங்கள்' (நற். 202: 9)

(3) தண்மை , சாயல்

"நின் தண்மையும் சாயலும் திங்கள்

உள' (பரி, 4: 26)

(4) வாய்மை

குன்று அகல் நல் நாடன்

வாய்மையில் பொய் தோன்றின்

திங்களுள் தீத் தோன்றியற்று'

(கலி, 41:23-24)

(5) இளமை / மென்மை

'ஐய! திங்கட்குழவி, வருக! என'

(கலி, 80:18)

(6) வெண்மை

நெடு வெண் திங்களும் ஊர்

கொண்டன்றே ' (அகம். 2:17)

(7) தேய் திங்கள் - இறப்பு, வளர்

திங்கள் - பிறப்பு

'தேய்தல் உண்மையும் பெருகல்

உண்மையும் மாய்தல் உண்மையும்

பெருகல் உண்மையும் அறியா

தோரையும் அறியக் காட்டித்

திங்கட் புத்தேள் திரிதரும்

உலகத்து'

(புறம். 27:11-14)

(8) தண்மை , அருள்


திங்கள்


'ஞாயிறு அனையை, நின்

பகைவர்க்கு திங்கள் அனையை,

எம்மனோர்க்கே ' (புறம். 59:6-7)

(9) புகழ்

'விரிகதிர வெண்திங்களின்

விளங்கித் தோன்றுக அவன்

கலங்கா நல் இசை!'

(புறம். 396:27-28)

(10) முதன்மை - main

'மீன் பூத்தன்ன வான் கலம்

பரப்பி, .. .. .. .. மங்குல் வானத்துத்

திங்கள் ஏய்க்கும்' (பெரும். 477-480)

(11) உயர்குடிப்பிறந்தார் - noble birth

'ஒருபுடை பாம்பு கொளினும்

ஒருபுடை அங்கண்மா ஞாலம்

விளக்குறூஉந் திங்கள் போல்

செல்லாமை செவ்வனேர்

நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார்

குடிப்பிறந்தார்' (நாலடி.148)

(18) சான்றோர் - great persons

'அங்கண் விசும்பின் அகனிலாப்

பாரிக்கும் திங்களும் சான்றோரும்

ஒப்பர்மன் திங்கள் மறுவாற்றும்,

சான்றோர் அஃதாற்றார்

தெருமந்து தேய்வர் ஒருமாசு

உறின்' (நாலடி.151)

(19) அறிவு, குற்றபின்மை

knowledge, blemishless

'மைவினை மறுவிலாத

மதியெனும் திங்கள் மாதோ'

(சீவக. 3145:2)

(ஆ) வெண் திங்களுள் வெயில்

வேண்டல் Ventinkalul veyil vental

(20) செயற்கருமை

'வெண் திங்களுள் வெயில்

வேண்டினும்' (புறம்.38: 8)

(இ) குழவித் திங்கள் Kulavit tiikal

(21) சிறப்பு

'குழவித் திங்கள் இமயவரேத்த

அழகொடு முடித்த வருமைத்

தாயினும்' (சிலப். 2: 38-39)

(ஈ) நிலவு Nilavu

(14) ஒளி

  • நிலவும் மறைந்தன்று; இருளும்

பட்ட ன்று ' (நற். 182:1)

வெண்மை


149