பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோள்

மேகலை ஆட்டி' (சிலப்.12: 1.60-

62)

(உ) மானுரி Minuri

துறவு

'மானுரி மடியு மந்திரக்

கலப்பையும் .. .. .. சங்கிய

நுனித்தவோர் சாறயர் முனிவனை'

(பெருங். உஞ்.36: 226, 231)

(ஒப்பு) Skin, Leather, hide இளமை,

தடுக்கும் ஆற்றல், தகுதி,

தியாகம், பணிவு, பிறப்பு,

பரிகாரம், மறுபிறப்பு, - மீட்புப்பேறு,

வளமை; அறிவு மழுக்கம்,

நம்பிக்கையின்மை, நைய

அடித்தல், பரிவின்மை ,

மான் தோல் - அறியாமை,

தூய்மை ,

புலித்தோல் - ஆற்றல்,

கொடுஞ்செயல்,

காண்டாமிருகத் தோல் -

பாதுகாப்பு.

தோள் Tol (shoulder)

(1) அழகு - beauty

'நோயும் நெகிழ்ச்சியும் வீடச்

சிறந்த வேய் வனப்புற்ற தோளை

நீயே ' (நற். 82:1-2)

(2) இன்பம் துய்த்தல் - enjoyment

... .. .. .. குறுமகள் தோள்மாறு

படூஉம் வைகலொடு எமக்கே'

(குறு. 101:5-6)

(3) இன்பம் - pleasure

'விறல் வனப்பு எய்திய தோளும்'

(குறு. 226:2)

(4) திண்மை / வலிமை - firm, strong

'திண்தோள் வல்விற் காளையொடு'

(ஐங், 390:3)

(5) பெருமை - greatness

'கணைக்கால், வாங்கிய நுசுப்பின்,

பணைத் தோள்' (திருமுரு. 14)

(ஒப்பு) Arm, Shoulder ஆற்றல்,

உதவி, உழைப்பாளி, செயல்பாடு,

பாதுகாப்பு, வலிமை

தோற்கன்று Torkanru (leather calf)

(1) பொய்மை , ஏமாற்றம் – falsehood,


நஞ்சு


deception

'தோற்கன்று காட்டிக் கறவார்'

(சிறுபஞ்.84:7)

தோற்பை Torpai (skin bag)

(1) உடம்பு - body

தோற்பையுள் நின்று தொழிலறச்

செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக்

கால்' (நாலடி.26: 3-4)

தோன்றி Tonri (a plant)

(1) வளம் - furtile

தோன்றி தோன்றுபு புதல் விளக்கு

உறாஅ' (நற். 69:6)

(2) அழகு - beauty

'மணி கண்டன்ன மா நிறக்

கருவிளை ஒண் பூந் தோன்றியொடு

தண் புதல் அணிய' (நற். 221:1-2)

(3) சிவப்பு நிறம் - red

'குவி இணர்த் தோன்றி ஒண்பூ

அன்ன தொடுசெந் நெற்றி

கணம்கொள் சேவல்' (குறு, 107:1-2)

(4) கார்காலம் - rainy season

'விடு கொடிப் பிறந்த மென் தகைத்

தோன்றிப் பவழத்து அன்ன செம்

பூத் தாஅய், கார் மலிந்தன்று, நின்

குன்று ' (பரி. 14:15-17)

(6) தூய்மை - pure

'தூ இதழ் துணர் துதைந்து

தோன்றுகின்ற தோன்றியின்'

(சூளா .793: 2)

நஞ்சு Naicu (poison)

(1) தீமை - evil

'முந்தை இருந்து நட்டோர்

கொடுப்பின், நஞ்சும் உண்பர் நனி

நாகரிகர்' (நற்.355:6-7)

(2) கொலை, அச்சம் - killing, fear

'கவைமக நஞ்சு உண்டா அங்கு ,

அஞ்சுவல் - பெரும!' (குறு.324: 6-7)

(3) இறப்பு - death

'நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து

உண்டாங்கு' (கலி, 74:8)

(4) கருமை

175