பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்

(இ) கல்லா மாந்தர் உள்ளம்

Kalla mantar ullam |

(14) நொய்மை , தாழ்தல் – fragile, low

'கல்லா மாந்தர் உள்ளம் போல

நொய்ந்நுரை சுமந்து மெய்ந்நயம்

தெரிந்த மேலோர் நண்பிற் தாழ

இழிதரும்' (பெருங் உஞ்.50: 12-14)

(15) விரைவு | வேகம்

'கடவுகின்றது காற்றினும்

மனத்தினும் கடியது'

(கம்ப.யுத்.1441: 2)

நெய் Ney (ghee)

(1) பொருட்செல்வம் - wealth

'.. .. .. .. விளக்கொளியும்

நெய்யற்ற கண்ணே அறுமே

அவரன்பும் கையற்ற கண்ணே

அறும்' (நாலடி.371: 2-4)

(2) மறைவு - disappear / hidden

'நெய்யொப் பானைநெய்யிற் சுடர்

போல்வதோர் மெய்யொப் பானை

விண்ணோரும் அறிகிலார்'

(திருநா, தேவா.246: 1-2)

(3) நறுமணம் -pleasant smell

சேதா நறு நெய்யும் தீம்பால்

சுமைத்தயிரும்' (சீவக.481: 1)

(ஆ) பாலில் படு நெய் Palil patu

ney

(4) இறைமை, மறைந்து உறைதல்,

உட்படுதல்

'விறகில் தீயினன் பாலில் படு

நெய் போல் மறைய நின்றுளன்

மாமணிச் சோதியான்'

(திருநா தேவா.30: 1-2)

(இ) பிரைசேர் பாலின் நெய்

Piraicer palin ney

(5) மௌனம்

'பிரைசேர் பாலின் நெய்போலப்

பேசாது இருந்தால் ஏசாரோ'

(திருவா.21: 5:7-8)

நெய்க்குடத்தை எறும்பு மொய்த்தல்

Neykkutattai erumpu moyttal

(1) ஈர்ப்பு , ஈடுபாடு - attract, involue

'பொள்ளல் நல் வேழத்து உரியாய்

புலன் நின்கண் போதல் ஒட்டா


நெய்தல்


மெள்ளனவே மொய்க்கும்

நெய்க்குடம் தன்னை எறும்பு

எனவே' (திருவா.6: 24. 5-8)

நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்

எறும்புகள் Neykkutattaip parrl erum

erumpukal

(1) பரவுதல் - spread

'நெய்க் குடத்தைப் பற்றி ஏறும்

எறும்புகள் போல் நிரந்து எங்கும்'

(நாலா.443: 1-2)

நெய்தல் (நிலம்) Neytal

(1) கடற்கரை - seashore

'வருணன் மேய பெருமணல்

உலகமும்' (தொல்.951: 4)

(2) எற்பாடு - dawn

'எற்பாடு நெய்தல் ஆதல்

மெய்பெறத் தோன்றும்'

(தொல்.954)

(3) இரங்கல் - crying

'புணர்தல் பிரிதல் இருத்தல்

இரங்கல் ஊடல் இவற்றின்

நிமித்தம் என்றிவை தேருங்காலை

திணைக்குறிப்பொருளே'

(தொல்,960)

(4) போர் - war

'தும்பை தானே நெய்தலது புறனே'

(தொல்.1015)

'மைந்து பொருளாக வந்த

வேந்தனைச் சென்று

தலையழிக்கும் சிறப்பிற்றென்ப்

(தொல்.1016)

நெய்தல் (மலர்) Neytal (a flower)

(1) வளமை - futile

'கோட் சுறா வழங்கும் வாள் கேழ்

இருங் கழி மணி ஏர் நெய்தல் மா

மலர் நிரைய' (நற்.78: 1-2)

(2) மாலைக் காலம் | தனிமை -

even time / loneliness

'வள் இதழ் நெய்தல் கூம்ப, .. .. ..

.. புலம்பொடு வந்த புன்கண்

மாலை' (நற். 117: 3,7)

(3) தலைவி - heroine

தெறு கதிர் இன் துயில் பசு வாய்

திறக்கும் பேதை நெய்தற் பெரு

நீர்ச் சேர்ப்பற்கு ' (நற்.275: 5-6)

(4) நறுமணம் – fragrance

186