பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தமிழில் அறிவியல்- அன்றும் இன்றும்




கோடல் மரபு கூறுங் காலை
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
முன்னும் பின்னும் இரவிலும் பகலிலும்
அகலா னாகி அன்பொடு கெழீஇக்
குணத்தொடு பழகிக் குறிப்பின்வழி நின்று.¹

என்ற நூற்பாப் பகுதியால் அறியலாம். அன்றியும், இதனால் மாணாக்கர்கள் ஆசிரியர்களோடு உடனுறைந்து நெருங்கிப் பழகுவர் என்றும், ஆசிரியரும் ஒவ்வொரு மாணாக்கரையும் நன்கறிந்து அவருடைய இயல்புகள், குணங்கள், செயல்கள் முதலியவற்றைக் தெரிந்துணர்ந்து கடிய வேண்டியவற்றைக் கடிந்தும், வளர்க்க வேண்டியவற்றை வளர்த்தும், சிறந்த குடிமகனாகச் செய்யும் பொறுப்பினை மேற் கொண்டிருக்க வேண்டும்என்பதையும் உய்த்துணரலாம். இது பற்றியபலசெய்திகளைத் தொல்காப்பியப் பாயிர நச்சினார்க் கினியர் மேற்கோள்களிலிருந்தும், தொல்காப்பியத்திலிருந்தும், நன்னூல் பொதுப் பாயிர நூற்பாக்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

பயிற்று முறையைக் குறித்து² நச்சினார்க்கினியர் காட்டும்,

ஈதல் இயல்பே இயல்புறக் கிளப்பின்
பொழிப்பே அகலம் நுட்பம் எச்சமெனப்
பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்
புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஒரையில்
திகழ்ந்த அறிவினன் தெய்வம் வாழ்த்திக்
கொள்வோன் உணர்வகை அறிந்தவன் கொள்வரக்
கொடுத்தல் மரபெனக் கூறினர் புலவர்

.

என்ற மேற்கோள் நூ ற் பா வி ன ல் அறியலாம். நன்னூலாசிரியரும் பாடம் சொல்லுதல்பற்றி,

ஈதல் இயல்பே இயம்பும் காலைக்
காலமும் இடமும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி


1. நச்சினார்க் கினியர் தொல்காப்பியச் சிறப்புப் பாயிர

உரையில் காட்டும் மேற் கோள் நூற்பா.

2. பயிற்றும் முறையை 'ஈதல் இயல்பு' என்று

பண்டையோர் குறிப்பிடுவர்.