பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தமிழில் அறிவியல் செல்வம் பொருத்தப் பெற்றிருக்கும் தொலைக்காட்சி அமைப்பால் விண்வெளி வீரரின் செயல்களனைத்தும் பூமியிலிருந்த வண்ணம் கண்டறியும் வாய்ப்புகளும் உள்ளன. (ஐ) அதுபவப் பயிற்சிகள் : மேற்குறிப்பிட்டுள்ள அதுபவங்களைப் பெறுவதற்கு விண்வெளி வீரர்கள் தகுந்த பயிற்சிகளைப் பெறுகின்றனர். உடற்கட்டும் உடல் நலமும் உள்ளவர்களே இதற்குப் பொருத்தமானவர்கள். சாதாரணமாக பயிற்சி ஐந்தாண்டுக் காலம் தொடர்ந்து நடைபெறும் இருபத்தெட்டு வயதிற்கு மேலும் முப்பத்தைந்து வயதிற்குட்பட்டும் 162.5 செ.மீ முதல் 177.5 செ.மீ. வரை உயரம் உள்ளவர்களே இப்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பெறுவர். இந்த உயரத்திற்குரிய சராசரி எடையைவிடச் சற்றுக் குறைவான எடையுள்ளவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் பட்டப்படிப்புடன் வானஇயல், இயற்பியல், வேதியியல், பொறியியல், மருத்துவ இயல் முதலிய துறைகளிலும் கற்றுத் தெளிந்த அறிவு பெறல் வேண்டும். ஏறக்குறைய 1000 பேர் இந்தப் பயிற்சியில் சேர்ந்தால் இறுதியில் 5 பேர்களே எல்லாத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறலாம். இவர்கள் விமானப் படையினர் போன்று பயிற்சி பெறுதல் வேண்டும். இப்பயிற்சிக்கென்றே பல்வேறு பொறியியல் அமைப்புகள் கண்டறியப் பெற்றுள்ளன. இப்பயிற்சிக்காலத்தில் இரண்டு மூன்று பேர் இராக்கெட்டு விமானத்தைச் செலுத்துவதற்குச் சிறப்பான பயிற்சி பெறுவர். விண்வெளிக் கூண்டில் (Astrodine) அவர்கட்கு இப்பயிற்சி அளிக்கப் பெறும் வண்ணப்படங்களின் மூலம் விண்மீன்களின் நிலை, கோள்களின் திலை முதலிய தகவல்களை அறிந்து கொள்கின்றனர். கணிதத் துறையிலும் அவர்கள் ந ல் ல தேர்வு அ ைடகின்றனர். கோன்கட்கிடையிலுள்ள தூரம் பூமிக்கும் வான்மதிக்கும் இடையேயுள்ள தூரம் முதலியவற்றை இவர்கள் கவனித்துக் கொண்டு இராக்கெட்டு விமானத்தைச் செலுத்தும் திறனைப் பெறுதல் வேண்டும்.