பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பொழிவு நான் 26-2-99 பிற்பகல் உயிரியல் நோக்கில் தலைவர் அவர்களே தமிழ்ச் சான்றோர்களே மாணவமணிகளே வணக்கம். முற்பகல் சொற்பொழிவிலே இறைவன் படைப்பில் உள்ள உயிற்ற பொருள்களைப்பற்றிப் பேசினேன். அதாவது வைணவ தத்துவத்தின் அசித்து பற்றிப் பேசியதாகக் கொள்ளலாம். பேசியது சித்து வகையைச் சாாந்த அடியேன் இப்போது உயிருள்ள பொருள்களைப்பற்றிப் பேச முன்வருகின்றேன். அதாவது சித்து பிரிவைச் சார்ந்த நான் சித்து பிரிவைச் சார்ந்ததன் வகையையும் பிறவகையையும் பேசுவதாகக் கொள்ளலாம். " . இந்த பொழிவில் மானிட இயலில் பிறப்பியல் பகுதியை மட்டிலும் விரிவாக விளக்க் நினைக்கின்றேன். இப்பகுதியைத் தவிர ஏனைய பகுதிகள் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் 'பள்ளிகளின் பாடத்திட்டத்தில் உள்ளமையால், அவற்றைப் பற்றி எல்லோரும் ஒரளவு விளக்கமாக அறிந்திருத்தல் கூடும். ஆகவே அவற்றைத் தவிர்த்து மருத்துவக் கல்லூரியில் விளக்கப்பெறும் பிறப்பியல் பற்றி மருத்துவ மாணவர்களைத் தவிர பிறர் அறிய வாய்ப்பின்மையால், அதுபற்றி மட்டிலும் விளக்க நினைத்து என் பொழிவில் இணைத்துக் கொண்டேன். அடுத்தபகுதி கால்வழியியல் (Genetics) பற்றியது. இது பற்றியும் பட்டப்படிப்பு உயிரியல் மாணாக்கர்கள் கூட அதிக விளக்கமாக அறிய வாய்ப்பின்மையால் அதுபற்றியும்