பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பேரிடர்களை விளக்கும் போக்கும் சிறப்பாக அமைகின்றது. அம்புலிப் பயண முயற்சிகளாக அமெரிக்கர்களின் மெர்க்குரித் திட்டம், ஜெமினித் திட்டம். அப்போலோத் திட்டம் என்ற மூன்று திட்டங்களைச் சுட்டிக்காட்டி அப்போலோ-8 முதல் 1 வரை மேற்கொண்ட பயணங்கள் அனைத்தையும் விரிவாகவும் நுட்பமாகவும் விளக்குவது அற்புதம். இப்பகுதி விண்வெளிப் பயணத்தை அறிந்துகொள்ள விழையும் ஆர்வலர்கட்குப் பெருந்துணை புரியும், இரஷ்யர்களின் முயற்சியும் சுட்டப் பெறுகின்றது. - ‘உயிரியல் நோக்கில் என்ற இரண்டாம் பொழிவில் (1) மானிடப் பிறப்பியல் (2 கால்வழிஇயல் என்ற இரண்டு பகுதிகள் அமைகின்றன எல்லாம்வல்ல இறைவன் படைப்பில் மனிதன் படைப்பு ஏணிப் படியில் உச்சகட்டப் படியில் வீற்றிருக்கும் நிலையைச் சுட்டிக்காட்டிப் படைப்பின் விந்தையை விளக்கத் தொடங்கும் பேராசிரியர் ரெட்டியார் இனப்பெருக்க மண்டலத்தில் தொடங்கி, ஆண் பிறப்புறுப்புக்கள் அடங்கிய தொகுதிக்கும். பெண் பிறப்புறுப்புக்கள் அடங்கிய தொகுதிக்கும் உள்ள ஒற்றுமை நயத்தை விளக்கி, விந்தணுக்கள், முட்டையணுக்கள் இவற்றின் அமைப்புக்களையும் இயல்புகளையும் தெளிவாக விளக்கி கருவுறுதலில் அவற்றின் செயற்பாடுகளைத் தெளிவாக்குகின்றார். அறிவியலடிப்படையில் சுகப்பிரசவத்தை விளக்கும் போக்கில் பல வகைப் பிரசவங்களைத் தெளிவாக விளக்குகின்றார். ஆயுதப் பிரசவம் முழவிளக்கம் பெறுகின்றது; அவை நேரிடும் சந்தர்ப்பங்கள் கட்டியுரைக்கப் பெறுகின்றன. மாதவிடாய், சூதக ஒய்வு பெண்ணின் வாழ்க்கையில் உள்ளவை - அறிவியல் அடிப்படையில் விளக்கம் பெறுகின்றன. . மருத்துவ உலகில் ஒரு காவியம் போன்ற மானிடப்பிறப்பில் முக்கிய பகுதிகளாகிய கருப்பகாலம், கருப்பகாலச் சின்னங்கள். கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், நச்சு வாந்தி, கருவுயிர்த்தலில் பல கோளாறுகள், குடும்பிக்கட்டுப்பாடு முதலியவை காலச் சுருக்கம் கருதி விளக்கம் பெற முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து பிறப்பியல் நிறைவு பெறுகின்றது. மருத்துவப் படிப்பு மாணவர்கட்குரிய பல செய்திகள் பொதுப்படிப்பு மாணவர்கட்குக் கிட்டச்செய்த பேராசிரியர் ரெட்டியாரின் முயற்சி மிகவும் பாராட்டப் பெறவேண்டியதாகும். இவருடைய பேச்சில் தெளிவான விளக்கக் கூறுகள் கேட்போர் மனத்தில் ஆழப் பதியும் பான்மையுடையன.