பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 123 பெறுகின்றன. இந்த நுட்பத்தையும் அகப்பொருளின் சிறப்பையும் அறிந்த வள்ளுவப் பெருந்தகை "முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற்றற்று" என்று கூறியுள்ளதை எண்ணி எண்ணி மகிழ்கின்றோம். இலக்கியமும் அறிவியலும் இணைந்து கைகோத்துச் செல்வதை ஈண்டு உணர்ந்து களிக்கலாம். உள்ளுறுப்புகள் : புறநிலை உறுப்புகளை அறிந்த நாம் அக நிலை உறுப்புகளைக் காண்போம். இவை முதுகெலும்புப் பகுதிக்கும் வயிற்றுச் சுவருக்கும் இடையில் இடுப்பெலும்புக் குழியில் அமைந்துள்ளன. ( யோனிக்குழல் : இது சிறுநீர்ப்பைக்கும் மலக்குடலுக்கும் இடையே கால்வாய்போல் அமைந்திருப்பது. இது தசையாலான மிருதுத் தன்மையுள்ள குழல். இது கருப்பையையும் புறத்தே காணப்பெறும் யோனி (Vica என்ற பெண்ணுறுப்பையும் இணைக்கின்றது. இணை விழைச்சு நடைபெறும்பொழுது இஃது ஆணுறுப்பையும் (Penis) விந்துவையும் வாங்கும் பகுதியாகும். மாதவிடாயின்பொழுது கருப்பையிலிருந்து ஊறும் திரவங்களையும் வேறு திவரங்களையும் வெளியேற்றுவதும் இப்பகுதியே. புதிதாகப் பிறக்கும் குழந்தை இப்பகுதி மூலமே வெளிவருகின்றது. எனவே, இது பிறப்பு வழியின் ஒரு பகுதியாகின்றது. அமைப்பு : சாதாரணமாக யோனிக்குழல் சற்றேறக்குறைய மூன்று அல்லது மூன்றரை அங்குல நீளமுள்ளது. இஃது ஆளுக்கு ஆள் வேறுபடுவதுடன் பெண்ணின் கலவி வாழ்க்கையையும் அவளது பிரசவ வரலாற்றையும் பொறுத்தது. மணமாகாத பெண்ணுக்கு மிக ஆழமான யோனிக் குழலும், மணமாகிப் பல ஆண்டுகளான பெண்ணுக்கு ஆழமற்ற யோனிக்குழலும் இருப்பதாக அதுபவம் மிக்க மருந்துவர்கள் கூறுவர். பெரும்பாலும் குழலின் ஆழமும் அகலமும் பெண் கருவுறுதலும் கருவுயிர்த்தலாலுமே மாற்றம் அடைகின்றன. 12. குறள் - 402