பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலமுகம ஏத்திமத மெல்லாம் எதையறிந்தேம் என்னும்? எதைச் சாத்திரங்கள் நன்காய்ந்து சலிக்கும்? எதை - நாத்திகமோர் சற்றுமே ஒர்ந்திலதாச் சாதித் திடும்? அதையே பற்றுவாய் நெஞ்சே பரிந்து' - வெ.ப. சுப்பிரமணிய முதலியார் இடையின்றி அணுக்க ளெலாம் சுழலுமென இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்: இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென வானூலார் இயல்பு கின்றார்: இடையின்றித் தொழில் புரிதல் உலகினிடைப் பொருட்கெல்லாம் இயற்கை யாயின் இடையின்றிக் கலைமகளே! நினைதருளில் எனதுள்ளம் இயங்கொ ணாதோ? - பாரதியார் 'தமிழில் அறிவியல் செல்வம்' என்ற இந்தநூல் அறிவியல் தமிழ்பற்றிப் பேசுவதற்காக ஏற்படுத்தப்பெற்ற அறக்கட்டளையில் பேசப்பெற்ற இரண்டு சொற்பொழிவுகளின் வடிவமாகும். முதற்பொழிவு இயற்பியல் நோக்கிலும், இரண்டாவது பொழிவு உயிரியல் நோக்கிலுமாக அமைந்தவை. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அறிவியில் உணர்வும் ஆர்வமும் ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தால் ஏற்படுத்தப் பெற்ற அறக்கட்டளையாகும் இது. முதற்பொழிவில் ஆதவனே ஆற்றல் மூலம் அண்மைக்கால அறிவியல் முன்னேற்றத்தில் கண்டறியப் பெற்ற அணுவின் ஆற்றல்', அறிவியல் உலகத்தையே அதிர்ச்சியுடன் கலக்கிவரும் 'விண்வெளிப்பயணம்' என்பவைபற்றி விரிவான செய்திகள் விளக்கம் அடைந்தன. இரண்டாவது பொழிவில் மருத்துவ மாணவர்கள் மட்டிலும் கேட்டு ஆழங்கால்படும் மானிடப் பிறப்பியல் பற்றிய செய்திகளும், மக்கள் பிறப்பில் காணப்பெறும் 1. அகலிகை வெண்பா - கடவுள் வாழ்த்து 2. பா.க. பாஞ்சாலி சபதம் - இரண்டாம்பாகம் - கலைமகள் வணக்கம். ---