பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 135 வெளிப் புரையிலிருந்து தோல், உரோமம், நகம் முதலியவை: தோன்றுகின்றன. நடுப்புரையிலிருந்து தசைகள், குருதிக் குழல்கள், எலும்புகள் முதலியவை உண்டாகின்றன. உட்புரையிலிருந்து உணவுக் குழல், நுரையீரல் முதலியவை உண்டாகின்றன. இச்செயல்கள் யாவும் மிகவும் சிக்கலானவை: கருவளர்ச்சி நிபுணர்கள் (Emprgologists) கூட அவற்றை முழுவதும் புரிந்து கொண்டதாக ஒப்புக் கொள்வதில்லை. இரண்டாம் திங்கள் இறுதியில் ஆதி நரம்பு மண்டலம், அரைகுறையான கண்கள், காதுகள், வளரப் போகும் எலும்புகள், தசைகள், கைகால்கள் ஆகியவை அமைகின்றன. நான்காவது வார இருதியில் இது கால் அங்குல நீளம் உள்ளது. இரண்டாவது திங்கள் இடையிலும் மானிட இளஞ்சூல் ஏனைய பாலுண்ணிகளின் (Mளds கருவைப் போலவே உள்ளது. அதனிடம் செவுள்கள் (Gills) காணப்பெறுகின்றன. அது பாய்மம் நிரம்பி கையில் வாழ்கின்றது. இதுதான் பனிக்குடம் (Bag ofயaters) என்பது. இப்பொழுது அதற்கு ஒரு வாலும் உண்டு. அஃது இரண்டாவது திங்கள் இறுதிக்குப் பிறகுதான் மறைகின்றது. எட்டாவது வார இறுதியில் அது முக்கால் அங்குல நீளம் உள்ளது. இப்பொழுதுதான் உருவ அடையாளங்கள் காணத் தொடங்குகின்றன; இதன் பிறகு குழந்தை பிறக்கும் வரை முதுகுல் நிலை ஆகும் உடலை விடப் பெரிதான தலை, முக அடையாளங்கள், கை கால்கள் முதலியவற்றை இப்பொழுது தெளிவாகக் காணலாம். பதினாறாவது வாரத்தில் சிசு சுமார் ஆறரை அங்குல நீளமும் இரண்டு அவுன்சு எடையும் பெறுகின்றது. இப்பொழுது இது திட்டமான மனித உருவத்தை அடைகின்றது. விரல்களும் பெருவிரலும் தனியாகப் பிரிந்து மிருதுவான நகங்களைப் பெறுகின்றன. இப்பொழுது பிற்ப்புறுப்புகளும் புலனாகின்றன: