பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 143 தமிழ்நாட்டார் சேலம் ஒட்டுமாம்பழத்தின் சுவையை நன்கு அதுபவித்திருப்பார்கள். சென்னைப் பழக் கடைகளிலும் பெங்களுர் பழச் சந்தைகளிலும் எத்தனையோவித மாங்கனிகள் நம் கண்களைப் பறிக்கின்றன. அவற்றின் பல்வேறு மணங்கள் நம் மூக்கைத் துளைக்கின்றன. சுவையோ சொல்ல வேண்டியதில்லை; தேனையும் தோற்கடித்து விடுகின்றது. இவை ய வும் கலப்பினச் சேர்க்கையால் ஏற்பட்ட கற்பகக் கனிகள்! இவண் கூறியவற்றை நோக்கும்போது நமக்குப் பல உண்மைகள் பளிச்சிடுகின்றன. மக்கள் வழிவழியாகச் சொத்துகளைப் பெறலாம் அல்லது பெறாமலும் போகலாம். ஆனால் அவர்கள் தம் பெற்றோர்களிடமிருந்து நேர்முறையிலோ அல்லது வழிவழியாக வரும் தமது முன்னோர்களிடமிருந்தோ நிறம், உருவம், உயரம், பருமன், முகவெட்டு முதலான சில உடலமைப்புகளை பெற்றே ஆகவேண்டும். இது கால்வழி இயலின் (Genetics நியதி; தவிர்க்க முடியாத சட்டம். ஆனால் தாமாக அவர்கள் சூழ்நிலையால் (Eriபironment) சில பண்புகளையும் திறன்களையும் அடைகின்றனர் என்பதையும் அறிகின்றோம். அறிவு, திறன்கள், குணம், ஆயுள் முதலியனவும் மரபு வழியாக இறங்கி வருவதையும் நாம் காண்ாமல் இல்லை. இவைமட்டுமா? கண்பார்வையில் சில குறைபாடுகள், மாலைக்கண், நிறக்குருடு, செவிட்டுமைவழுக்கை மண்டை, ஹொமோஃபீலியா என்ற குருதிநோய், மனவலி இல்லாமை, பைத்தியம் ஆகியவைகளும் மரபு வழியாக இறங்கி வரும் நோய்களாகும். இவற்றை எந்த முறையிலாயினும் தடுத்து நிறுத்தும் வழிவகைகள் உள்ளனவா? . . . . . விரையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா? என்பது தமது நாட்டில் மக்களிடையே வழங்கிவரும் ஒரு பழமொழி. முளைக்கலாம் அதனால் ஏமாற்றமும் 1 சிறுகாயம் ஏற்பட்டாலும் குருதி நீங்காமல் வடியும் ஒருவகை நோய்