பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தமிழில் அறிவியல் செல்வம் ஏற்படுகின்றது. அவர் போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் அவருக்குப் பிள்ளைப்பேறு ஏற்பட்டிருந்தால் அந்தக் குழவிகள் என்ன நிலையில் இருக்குமோ அதே நிலையில்தான் இக்குழந்தையும் இருக்கும். போரில் அவருக்கு ஏற்பட்ட இடர்கள் யாவும் குழந்தையைப் பாதிக்கா, (i) தொண்ணுறு வயதுள்ள தொண்டு கிழவர் ஒருவர். அவர் வன்மையுள்ள விந்துகளை உற்பத்தி செய்யக் கூடுமாயின் இத்தகையோர் இருப்பதற்குச் சான்றுகள் உள்ளன அவ்வணுக்களில் அவர் இருபது வயதுள்ள காளையாக இருந்தபொழுது உற்பத்தி செய்த விந்தணுக்களிலுள்ள மரபுவழிப் பண்புக் கூறுகளைப் போன்ற கூறுகளே () ஒரு பெண்ணின் இனப்பெருக்க வாழ்வு ஆணின் இனப்பெருக்க வாழ்வை விடக் குறுகியதா யிருப்பினும், அவள் நாற்பத்தைந்தாவது வயதில் உண்டாக்கும் முட்டையணுக்களுக்கும் அவள் பதினாறு வயதில் உண்டாக்கின முட்டையணுக்களுக்கும் அஃதாவது அவற்றிலுள்ள ஜீன்களின் தன்மைகளில் - யாதொரு வேற்றுமையும் இருக்காது. (u) எனினும், பல்வேறு நிலைகளில் ஒரு பெற்றோருக்குப் பிறக்கும் குழவிகளிடையே வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும் ஆயின், இது மரபுவழிக் கூறுகளின் அடிப்படையில் அமைந்ததன்று, நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண் பல்வேறு நோய்களினாலும் அல்லது வேறு உடற்கோளாறுகளாலும் பீடிக்கபட நேரிடும். இந்நிலையில் அவள் தாய்மை அடைய நேரிட்டால் அவள் குழந்தைக்குத் #55 b P.L. Lispá (5pffloose (Internal environment) 335.535573, அமையாது. ஆயின் தாயாக இருப்பினும் அல்லது தந்தையாக இருப்பினும் குழந்தைக்குத் தரும் வெளிப்புறச் சூழ்நிலை (External environment) உட்புறச் சூழ்நிலையை விட மிகவும் முக்கியமானது. இந்த வெளிப்புறச் சூழ்நிலையில்