உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 தமிழில் அறிவியல் செல்வம் அளிக்கும் பயிற்சியாலும் வாய்ப்பாகத் தரும் சூழ்நிலையாலும் அவன் மகனும் சிறந்த பாடகனாக அமைவதுண்டு. (பய் நன்கு கல்வி கற்று, நன்னிலையில் அமர்ந்து நல்வாழ்வு வாழும் தந்தை தன் மகனுக்கு வாழ்வில் நல்ல தொடக்கத்தை அமைத்துத் தரலாம். கசரத் பழகும் தந்தை தன் மகன் உடல்நிலையே நன்முறையில் அமைத்துத் தரலாம். உடல் நலத்துடனும் அறிவுடைமையுடனும் தாய் தான் பெற்றெடுக்கும் குழவிக்கு அது பிறப்பதற்கு முன்னும் எண்ணற்ற முறைகளில் நல்ல சூழ்நிலையை அமைத்துத் தரலாம். நல்ல குடிவழிப் பண்புக் கூறுகளைப் பெறும் குழந்தை தக்க வளர்ப்பு முறையின்றி நன்னிலையில் அமையாதும் போகலாம். சூழ்நிலை தரும் விள்ைவுகட்கும் ஒருவரம்பு உண்டு. {3} தவறான நம்பிக்கைகள் : கலவி புரிவதிலும் மக்கட் பேறுபெறுவதிலும் எத்தனையோ தவறான நம்பிக்கைகள் மக்களிடையே நிலவுகின்றன. அறிவைவிட அறியாமையே மிகவும் வன்மையாக மக்களை ஆட்கொள்ளுகின்றது. அன்போடு பிணைந்த இளந்தம்பதிகள் தமக்குப் பிள்ளைப் பேறு ஏற்பட வேண்டுமாயின் நல்ல மனநிலையிலிருந்து கொண்டு கலவி புரியவேண்டும் என்பது. இந்த நம்பிக்கையைக் குண்டு வைத்துக் கூட தகர்த்தெறிய முடியாது. அப்படி அகற்றப் புகுதல் குழந்தைகளை அவர்கள் விரும்பும் கலைப் பொருள்கள் இல்லை என்று சொல்லி அழ வைப்பது போலாகும். - ( அரண்மனையின் அந்தப்புரத்தில் பஞ்சணையின் மீது தம்பதிகள் கொஞ்சிப் குலவிப் புணர்வதாலோ அல்லது காதலர்கள் மாட்டுத் தொழுவத்தில் காற்றோட்டமில்லாத இடத்தில் பயந்து கொண்டு (குறியிடம் அது கலவி புரிவதாலோ, அல்லது தம்பதிகளின் அன்பு 1. இயேசு மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தார். மக்கள் குலத்திற்கு மகான். ஆனார். கண்ணன் சிறைச்சாலையில் பிறந்தான் மனித குலம் போற்றும் மாதவனாக பார்த்தனுக்குக் கீதை உபதேசம் செய்பவனாக ஆனான்.