பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தமிழில் அறிவியல் செல்வம் முரண்பாடான நிறக்கோல்கள் : வெவ்வேறு இனத்தைச் (Species) சார்ந்த இரு பிராணிகளிடையே நிறக்கோல்கள் பொருந்தாநிலை ஏற்படுகின்றது. எ.டு. (அ) ஒரு பூனையும் ‘நாயும் கல்வி புரிந்து குட்டிகளை ஈன முடியாது. (ஆ) வாத்தும் கோழியும் கலவி புரிந்து இனப்பெருக்கம் செய்தல் முடியாது. (இ) ஆயினும் ஒரு குதிரையும் கழுதையும் (Donkeu) கலவி புரிந்து கோவேறு கழுதையை Mile) உண்டாக்கலாம். ஆனால், கோவேறு கழுதையிடம் இனப்பெருக்கத்திற்குக் காரணமான பாலணுக்கள் (Sex cells) உண்டாவதில்லை. முரண்பாடுள்ள நிறக்கோல்களே இதற்குக் காரணமாகும். ஆனால், சில அரிய சந்தர்ப்பங்களில், பல சிக்கலான காரணங்களால், பெண் கோவேறு கழுதைகள் மலடாகவே உள்ளன. இதனால் கோவேறு கழுதைகள் நேர்முறையில் பல்கிப் பெருக முடியாது என்பது அறியத்தக்கது. மேலும் சிங்கமும் புலியும் பிறப்பியல் அடிப்படையில் வேறுபட்டாலும் இணைந்து சிம்மம் (Tigton) என்னும் ஒருவகைப் பிராணியை உண்டாக்குகின்றன என்று கூறுகின்றனர். மக்களிடம் : இவண் குறிப்பிட்ட பொருந்தா நிலை மக்களிடம் ஏற்படுவதில்லை என்பது கவனிக்கத் தக்கது. பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக் கலந்து கருப்பெறல் கண்ட துண்டோ? ஒருவகைச் சாதியாம் மக்கட் பிறப்பில்ஈர் இருவகை யாகநீர் இயம்பிய குலத்து ஆண்பெண் மாறி அனைதலும் அணைந்தபின் கருப்பொறை யுயிர்ப்பதுங் காண்கின் றிலிரோ? எந்நிலத் தெந்தவித் திடப்படு கின்றதோ அந்நிலத் தந்தவித் தங்குரித் திடுமால் மாறிவே றாகும் வழக்கமொன் றிலையே? கருப்பொறை உயிர்ப்பு - பிள்ளை பெறுதல் அங்குரித்தல் முளைத்தல்) - என்ற கபிலரகவல் பகுதியின் உண்மையும் சிந்திக்கற் பாலது. 8. கபிலரகவர் - அடிகள் (68-77.